null
மலையாள நடிகர் சீனிவாசன் மறைவு - நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா
- எர்ணாகுளத்தில் கந்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.
- ரஜினிகாந்தும் ஸ்ரீவிவாசனுடன் வகுப்புத் தோழனாக இருந்ததை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 69.
கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீனிவாசன் நேற்று மரணமடைந்தார்.
ஸ்ரீனிவாசனின் இறுதிச் சடங்கு இன்று காலை எர்ணாகுளத்தில் கந்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பு தொடர்பாக எர்ணாகுளம் சென்றிருந்த நடிகர் சூர்யா, ஸ்ரீனிவாசன் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த வந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பில் இருந்தே அவரது படங்களைப் பார்க்கிறேன். ஸ்ரீனிவாசனின் மரணச் செய்தியைக் கேட்டதும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
நேரில் வந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற தோன்றியது. சினிமாவுக்கு அவரது பங்களிப்புகள், அவர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் மற்றும் அவரது எழுத்துக்கள் எப்போதும் அனைவரின் மனதிலும் இருக்கும்" என்று தெரிவித்தார். முன்னதாக நகுடிகர் ரஜினிகாந்தும் ஸ்ரீவிவாசனுடன் வகுப்புத் தோழனாக இருந்ததை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.
நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் மலையாளம், தமிழ் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் எழுத்தாளர்.
நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்புகளுக்காக பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஸ்ரீனிவாசனுக்கு விமலா என்ற மனைவியும், வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் என்ற மகன்களும் உள்ளனர். இருவரும் மலையாள சினிமாவில் முக்கிய நபர்களாக உள்ளனர்.