சினிமா செய்திகள்

'மண்டாடி' பயிற்சி வீடியோவை பகிர்ந்த சூரி!

Published On 2026-02-03 20:31 IST   |   Update On 2026-02-03 20:31:00 IST
  • மீனவர்களுக்குள் நடக்கும் படகுப்போட்டியை அடிப்படையாக கொண்டும் படம் உருவாகி வருகிறது.
  • படம் கோடையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் மண்டாடி. இதில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மீனவர்களின் வாழ்க்கை பின்னணியை அடிப்படையாக கொண்டும், அவர்களுக்குள் நடக்கும் படகுப்போட்டியை அடிப்படையாக கொண்டும் படம் உருவாகி வருகிறது.

காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வரத்தையும் அவற்றின் திசைவழிப் போக்கையும் பற்றிய நல்ல அறிவையும் அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்கச் செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரைத்தான் மண்டாடி என அழைப்பர். இதில் சூரி தலைவராக இருப்பதால் படத்திற்கு மண்டாடி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படம் கோடையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்திற்காக கடலில் பயிற்சி எடுக்கும் வீடியோவை நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் இரத்தம், வியர்வை, தளராத அர்ப்பணிப்பால் எழுதப்படும் ஒரு பயணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News