சினிமா செய்திகள்

`லீடர்' படத்தின் கதை இதுதான்... படவிழாவில் ஓபனாக பேசிய லெஜண்ட் சரவணன்

Published On 2026-02-04 15:43 IST   |   Update On 2026-02-04 15:43:00 IST
  • நான் என் தந்தையின் தொழிலை கவனிக்க வேண்டியிருந்தது.
  • இது அரசியல் படமா என்று பலருக்கு கேள்விகள் எழலாம்.

லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்திற்கு லீடர் என தலைப்பிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

டீசர் வெளியீட்டைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய லெஜண்ட் சரவணன், "சிறுவயதில் இருந்தே எனக்கு சினிமா மீது மிகுந்த ஆர்வம் உண்டு. என் ஃபிரிட்ஜில் இரண்டு பக்கங்களிலும் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் புகைப்படங்கள் ஒட்டியிருப்பேன். ஒரு நாள் நானும் அவர்களை போல் ஆவேன் என்று என் அம்மாவிடம் சொல்வேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நான் என் தந்தையின் தொழிலை கவனிக்க வேண்டியிருந்தது."

"ஜவுளி மற்றும் சினிமா ஆகிய இரண்டு தொழில்களிலும் நான் முதல் ஆளாக வந்து கடைசி ஆளாக செல்வேன். எந்த வேலையாக இருந்தாலும், அதில் என் முழுத் திறமையையும் வெளிப்படுத்துவேன். 'லீடர்' என்ற தலைப்பைப் பார்த்ததும், இது ஒரு அரசியல் படமா என்று பலருக்குக் கேள்விகள் எழலாம், ஆனால் இது ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படம்."

"ஒரு அப்பாவி தந்தையும் மகளும் அமைதியாக வாழ்க்கை வாழ்கிறார்கள், ஆனால் ஒரு கும்பல் அவர்களின் வாழ்க்கையில் தலையிடுகிறது. இதுதான் கதை. ஆரம்பம் முதல் இறுதி வரை, இயக்குநர் துரை செந்தில்குமார் தனது திரைக்கதையால் இதை சிறப்பாக செதுக்கியுள்ளார். இந்த திரைக்கதை இந்த தலைமுறைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்," என்றார்.

Tags:    

Similar News