என் மலர்
சினிமா செய்திகள்
பெங்களூருவில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
கன்னடத்தில் வளம்வரும் இளம் நடிகையாக அறியப்படுபவர் ஜெயஸ்ரீ ராமையா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு கன்னட பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். கன்னட கொத்திலா, உப்பு குலி காரா ஆகிய படங்களிலும் ஜெயஸ்ரீ ராமையா நடித்து இருந்தார்.
இந்த நிலையில் ஜெயஸ்ரீ ராமையா தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் நான் மனசோர்வாக உள்ளேன். இந்த உலகத்தில் இருந்து விடைபெறுகிறேன் என்று கூறியிருந்தார். இந்த பதிவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பதிவை பார்த்த ஜெயஸ்ரீ ராமையாவின் நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் அவர் செல்போன் அழைப்பை எடுத்து பேசவில்லை.
இந்த நிலையில் ஜெயஸ்ரீ ராமையா தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அவரது தோழியும், நடிகையுமான அஸ்வதி ஷெட்டி முற்றிலுமாக மறுத்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை ஜெயஸ்ரீ ராமையா தனது முகநூல் பக்கத்தில் இன்னொரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் நான் பாதுகாப்பாகவும், நலமாகவும் உள்ளேன். அனைவரையும் நேசிக்கிறேன் என்று கூறி இருந்தார். மேலும் அவர் முந்தைய பதிவையும் அழித்து இருந்தார். ஜெயஸ்ரீ ராமையா கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் புதிதாக ஒரு வீட்டை வாங்கி இருந்தார்.
இதுதொடர்பாக அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதனால் மனஅழுத்தத்தில் இருந்த ஜெயஸ்ரீ ராமையா தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கன்னட நடிகை தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐ, 2.O படங்களில் நடித்த நடிகை எமி ஜாக்சன், இத்தாலிக்கு சுற்றுலா சென்று நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.
ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டார். குழந்தைக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயர் வைத்தனர். சமீப காலமாக குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு வந்தார் எமி ஜாக்சன். அதனைத்தொடர்ந்து கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.
தற்போது எமி ஜாக்சன் தனது குடும்பத்தினருடன் இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார். தற்போது அங்கிருந்து நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர்கள் விமல் மற்றும் சூரி இருவருக்கும் தடையை மீறி மீன் பிடித்ததற்காக வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடைக்கானல் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்ட சிலர் கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் மீன்பிடித்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், கடந்த 17-ம் தேதி ஏரியில் நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகியோர் அங்கு மீன்பிடித்துள்ளது உறுதியானது. இதனை அடுத்து, விமல் மற்றும் சூரி உள்ளிட்டோருக்கு அபராதம் விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் இனி அத்துமீறி நுழைய கூடாது என நடிகர்கள் இருவருக்கும் வனத்துறை சரக கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன், கொரோனாவில் இருந்து நான் இன்னும் விடுபடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள்.
இந்தியளவில் பல்வேறு மொழி படங்களில் நடித்து அசத்திய அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்த பலரும், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வந்தனர்.
.. this news is incorrect , irresponsible , fake and an incorrigible LIE !! https://t.co/uI2xIjMsUU
— Amitabh Bachchan (@SrBachchan) July 23, 2020
இந்நிலையில், அமிதாப்பச்சன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்திருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு அமிதாப் பச்சன் இந்த செய்தி தவறானது, பொறுப்பற்றது, போலியானது நான் இன்னும் கொரோனாவில் இருந்து விடுபடவில்லை என்று டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ரேஷ்மாவின் சமீபத்திய போட்டோஷுட் வைரலாகி வருகிறது.
தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2, மணல் கயிறு 2 என ஒரு சில படங்களில் நடித்த ரேஷ்மா, கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3-வது சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். தற்போது லாக்டவுனால் வீட்டில் முடங்கியிருக்கும் ரேஷ்மா பிற பிரபலங்களை போன்று சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.
இந்நிலையில் அவர் சேலையில் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். ரேஷ்மாவின் இந்த கவர்ச்சி போட்டோஷுட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

ரேஷ்மா அடுத்ததாக ஒரு கிடாயின் கருணை மனு எனும் படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கும் "சத்திய சோதனை" எனும் படத்தில் நடித்துள்ளார். பிரேம்ஜி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் காவல்நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி காமெடி கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் மாநாடு படத்தின் முன்னோட்டம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
மேலும் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அரசியல் கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
நடிகை வனிதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சூர்யா தேவி என்பவரை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. பீட்டர் பால் முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். அந்தவகையில் சூர்யா தேவி என்ற பெண் தொடர்ந்து வனிதாவின் திருமணத்தைப் பற்றியும், வனிதாவை பற்றியும் பல்வேறு கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு வந்தார்.
வனிதாவும் அதற்கு பதிலளிக்கும் வண்ணம் பல்வேறு கருத்துக்களை வீடியோக்களாக வெளியிட்டிருந்தார். இதனையடுத்து நடிகை வனிதா, சூர்யா தேவி மீது போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார்.
இதேபோல் வனிதா மீது, சூர்யா தேவியும் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான புகார்கள் அனைத்தையும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து நடிகை வனிதாவையும், சூர்யா தேவியையும் போலீசார் அழைத்து விசாரித்தனர். இதுபோன்று அவதூறு செய்து வீடியோக்கள் வெளியிடக்கூடாது என இருவரையும் போலீசார் எச்சரித்தனர்.
போலீசாரின் எச்சரிக்கையை மீறி சூர்யா தேவி தொடர்ந்து நடிகை வனிதா குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டும் வகையிலும் வீடியோக்கள் வெளியிட்டதால், அவரை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பெண்ணை ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ‘வாடிவாசல்’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராகிறது. மெரினா போராட்டம் மூலம் உலக அளவில் பிரபலமான ஜல்லிக்கட்டு படத்தில் சூர்யா நடிப்பதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ஊரடங்கு முடிந்ததும் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சூர்யாவின் பிறந்தநாளான இன்று, தயாரிப்பாளர் தாணு வாடிவாசல் படத்தின் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "இன்று உங்கள் பிறந்தநாள் என்றும் அது சிறந்த நாள். இனிய இந்நன்னாளில் எல்லா நலமும் வளமும் பெற்று, தேக பலம், பாத பலம், ஆயுள் பலம் பெற்று வாழிய பல்லாண்டு" என வாழ்த்தியுள்ளார்.
இன்று உங்கள் பிறந்த நாள்...என்றும் அது சிறந்த நாள்...@Suriya_offl#HappyBirthdaySuriya#TeamVaadivasal@VetriMaaran@gvprakash#Vaadivasalpic.twitter.com/qtGAMk9oU6
— Kalaippuli S Thanu (@theVcreations) July 23, 2020
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா, தனது பிறந்தநாளான இன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகர் சிவக்குமாரின் மகனான சூர்யா, வாரிசு நடிகராக இருந்தாலும் தனது கடின உழைப்பால் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகமான சூர்யா, படத்துக்கு படம் தன்னை மெருகேற்றி கொண்டு சிறந்த நடிகராக உயர்ந்துள்ளார். நந்தா, மௌனம் பேசியதே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், சிங்கம், அயன் என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ள சூர்யா இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சூர்யாவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் #HappyBirthdaySuriya என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி சூரரைப்போற்று படக்குழு 'காட்டுப்பயலே' என்கிற பாடலை வெளியிட்டுள்ளது. தனது பிறந்தநாளை ஒட்டி இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கொரோனாவைவிட பெரிய கஷ்டங்களை எனது வாழ்க்கையில் பார்த்துவிட்டேன் என நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். 2010-ல் சாம்ராட் தேகல் என்பவரை மணந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்தார். பின்னர் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று மீண்டார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: “கொரோனாவால் நாட்டில் நிலவும் சூழல் என்னை பயமுறுத்தவில்லை. இதைவிட மோசமான புயல்கள், ஏற்கனவே எனது வாழ்க்கையில் வீசியுள்ளன. அதோடு ஒப்பிடும்போது கொரோனா எனக்கு சாதாரணமாகவே தெரிகிறது. வழக்கம்போல் அமைதியாகவே இருக்கிறேன். யோகா, தியானம் செய்கிறேன்.

இயற்கையோடு உரையாடுகிறேன். செடிகளுடனும், எனது பெற்றோர்களுடனும் நேரத்தை செலவிடுகிறேன். மும்பையில் பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் பறவைகள் சத்தம் கேட்கிறது. இதற்கு முன்பு இந்தமாதிரி அமைதியான சூழலை நான் கண்டதில்லை. மீண்டும் திருமணம் செய்து கொள்ள எண்ணம் இல்லை. நோய் பாதிப்புக்கு பின் தனியாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.” இவ்வாறு மனிஷா கொய்ராலா கூறினார்.
கொரோனா வைரஸ் காரணமாக பலருடைய திருமணங்கள் எளிமையாக நடைபெற்று வரும் நிலையில், பிரபல நடிகரின் நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக வழக்கமாக உற்றார் உறவினர்களுடன் சிறப்பாக நடைபெறும் திருமணங்கள் உள்ளிட்ட சடங்குகள் எளிமையாக நடைபெற்று வருகின்றன.
பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளும் அவ்வாறு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரபல தெலுங்கு ஹீரோ நிதினின் திருமண நிச்சயதார்த்தம் மிக எளிமையாக நடைபெற்றது.
Aaaand ENGAGED!! ❤️❤️❤️ pic.twitter.com/MqqbRo2HsS
— nithiin (@actor_nithiin) July 22, 2020
இதுகுறித்து நடிகர் நிதின் தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்தார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் நிதின் ‘ஜெயம்’ தெலுங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபல கிரிக்கெட் வீரர் சிறப்பு போஸ்டர் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப் போற்று திரைப்படம் உருவாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படம் வெளியாகாமல் இருக்கிறது. தன்னுடைய தனி திறமையால் தனக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் சூர்யா.
நடிகர் சூர்யா தன்னுடைய பிறந்தநாளை ஜூலை 23ம் தேதி கொண்டாட இருக்கிறார். ஆனால், அவரது ரசிகர்கள் 100 நாட்களுக்கு முன்னதாகவே கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 115 பிரபலங்கள் இணைந்து காமன் டிபி என்னும் போஸ்டரை வெளியிட்டார்கள். இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், சூர்யாவின் சிறப்பு போஸ்டரை பிறந்தநாளான நாளை சிஎஸ்கே மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரைனா வெளியிட இருக்கிறார். இது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இதை சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.






