சினிமா
ரிலீசுக்கு முன்பே சமூக வலைதளங்களில் கசிந்த பேட்ட டிரைலர்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. #Petta #Rajinikanth #PettaTrailer
ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் வருகிற பொங்கலை முன்னிட்டு 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
படத்தின் பாடல்கள் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே பேட்ட டிரைலர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். #Petta #Rajinikanth #PettaTrailer