சினிமா செய்திகள்

உலக அளவில் வசூலை குவிக்கும் "துரந்தர்"- போஸ்டரை வெளியிட்ட படக்குழு

Published On 2026-01-12 13:20 IST   |   Update On 2026-01-12 13:20:00 IST
  • ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியான படம் 'துரந்தர்'.
  • துரந்தர் படம் வெளியாகி இன்றுடன் 39 நாட்கள் ஆகிறது.

பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியான படம் 'துரந்தர்'. இப்படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், படம் வெளியாகி இன்றுடன் 39 நாட்கள் ஆன நிலையில், துரந்தர் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. அதன்படி, துரந்தர் இன்றுடன் உலகளவில் ரூ.1296 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும், இந்தியளவில் ரூ.1011.73 கோடியும், மற்ற நாடுகளில் ரூ.284.10 கோடியும் வசூலாகியுள்ளது.

Tags:    

Similar News