சினிமா செய்திகள்
null

Viral: அபுதாபி ரேஸிங் களத்தில் அஜித்தை சந்தித்த அனிருத்

Published On 2026-01-11 07:42 IST   |   Update On 2026-01-11 07:43:00 IST
பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் பங்கேற்றார்

நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.

ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் அபுதாபி ரேஸிங் களத்தில் இசையமைப்பாளர் அனிருத் அஜித்தை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கடைசியாக மலேசியாவில் நடந்த விஜய்யின் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அனிருத் தோன்றி இருந்த நிலையில் தற்போது அஜித்தை சந்தித்துள்ளார்.

குட் பேட் அக்லி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அஜித் புதிய படம் ஒன்றை நடிக்க உள்ளார். அஜித்தின் விடாமுயற்சி படத்தை போல இந்த படத்திற்கும் அனிருத் இசை அமைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  விடாமுயற்சி படத்தின் 'சவாதீக்கா' பாடல் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதே நேரம் குட் பேட் அக்லி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 

Tags:    

Similar News