சினிமா செய்திகள்

ரவி மோகனின் மூட நம்பிக்கை... சந்தோஷ் சுப்பிரமணியம் காட்சியை நடித்து காட்டிய வீடியோ வைரல்

Published On 2026-01-11 10:43 IST   |   Update On 2026-01-11 10:43:00 IST
  • 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது.
  • ரவி மோகனின் வில்லன் கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. இப்படத்தில் ரவி மோகனின் வில்லன் கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பராசக்தி படத்தின் ப்ரோமோஷனுக்காக ரவி மோகன் கொடுத்த நேர்காணல் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

cute ஆக நீங்க செய்யும் மூட நம்பிக்கை எது என்ற கேள்விக்கு பதில் அளித்த ரவி மோகன், " என் நண்பன் ஞாயிற்றுக்கிழமைகளில் சிவப்பு நிற உடை அணிய வேண்டும் என்று என்னிடம் கூறினான். அதை இன்று வரை செய்து வருகிறேன் என்று கூறினார். அதற்கு படப்பிடிப்பில் எப்படி இது சாத்தியமாகும் என்று கேள்விக்கு அப்போது சிவப்பு நிற உள்ளாடை அணிவேன் என்று ரவி மோகன் கூறியது இணையத்தி ட்ரெண்டானது.

மேலும், சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் cute ஆன வசனங்களை ரவி மோகன் recreate செய்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது

Tags:    

Similar News