நான்தான் இப்போ Kingu... வெளியானது Con City டைட்டில் டீசர்
- 'கான் சிட்டி' படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி உள்ள படம் 'கான் சிட்டி' (Con City). இப்படத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ், நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகி பாபு, மூத்த நடிகை வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
புதுமையான கதைக்களத்துடன் ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் 'கான் சிட்டி' படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில், தற்போது டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.
டீசரில், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் கடனில் சிக்கித்தவிக்கும்போது அவரது கையில் பட்டன் தட்டினால் பணம் கொட்டும் இயந்திரம் ஒன்று தென்படுகிறது. இந்த இயந்திரம், கணவன், மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் கிடைக்க இதன்பின் நடைபெறும் சம்பவங்களே காணப்படுகிறது.
டீசரை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.