சினிமா செய்திகள்

#Ajith அஜித்தின் 66-வது படத்தை இயக்கப்போவது இவரா? ரசிகர்கள் உற்சாகம்

Published On 2026-03-06 10:20 IST   |   Update On 2026-03-06 10:20:00 IST
  • அஜித்தின் புதிய படத்தை இயக்கப்போவது இவரா? ரசிகர்கள் உற்சாகம்
  • அஜித்குமாரின் 65-வது படத்தை சிறுத்தை சிவா இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து, மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ளது தெரிந்த கதை. இது அஜித்குமார் நடிக்கும் 64-வது படமாகும். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அஜித்குமாரின் 65-வது படத்தை சிறுத்தை சிவா இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் ஏற்கனவே 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளியாகி இருக்கின்றன.

இதற்கிடையில் அஜித்குமாரின் 66-வது படத்தை வெங்கட்பிரபு இயக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் 2011-ம் ஆண்டில் மங்காத்தா படம் வெளியாகி ஹிட் அடித்தது. சமீபத்தில் கூட இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் பார்த்தது.

இதற்கிடையில் அஜித் - வெங்கட்பிரபு கூட்டணியில் புதிய படம் உருவாகலாம் என்ற தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News