சினிமா செய்திகள்

பொங்கல் முன்னிட்டு வெளியாகுமா..? "வா வாத்தியார்" -க்கு மீண்டும் வந்த சிக்கல்

Published On 2026-01-12 18:55 IST   |   Update On 2026-01-12 18:55:00 IST
கார்த்தியின் ரசிகர்கள் இந்த பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாட தயாராகினர்.

தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் 'ஜன நாயகன்' வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது. கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் இன்று பராசக்தி படம் வெளியானது.

பொங்கல் வெளியீடாக பராசக்தி மட்டும் வெளியான நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மற்ற படங்களும் திடீரென்று பொங்கல் ரேஸில் குதித்துள்ளன.

கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இதனால் கார்த்தியின் ரசிகர்கள் இந்த பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாட தயாராகினர்.

வா வாத்தியார் படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கடனை முழுமையாக செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை அளித்துள்ளது.

அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் பெற்ற ரூ.21.78 கோடியில் ரூ.3.75 கோடியை இன்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா செலுத்திய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News