சினிமா செய்திகள்

நடிகர் சதீஷின் 'முஸ்தபா முஸ்தபா' படத்தின் அப்டேட்

Published On 2026-02-27 08:46 IST   |   Update On 2026-02-27 08:46:00 IST
  • ‘முஸ்தபா முஸ்தபா’ படத்திற்கு எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.
  • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் சதீஷ். இவர் தற்போது சுரேஷ் ரவியுடன் இணைந்து 'முஸ்தபா முஸ்தபா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ளார்.

பிரவீன் சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, லிவிங்ஸ்டன், சாம்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள 'முஸ்தபா முஸ்தபா' படத்திற்கு எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

இந்த நிலையில், 'முஸ்தபா முஸ்தபா' படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் இப்படம் வருகிற 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Tags:    

Similar News