சினிமா

கேரள வெள்ளத்தில் சிக்கி வீடியோ வெளியிட்ட நடிகை சீதாலட்சுமி மீட்பு

Published On 2018-08-21 06:17 GMT   |   Update On 2018-08-21 06:17 GMT
கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உதவிகேட்டு வீடியோ வெளியிட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை பிரபலம் சீதாலட்சுமி பாதுகாப்பு கடையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #KeralaFloods #KeralaFloodRelief
எங்க வீட்டு மாப்பிள்ளை தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சீதாலட்சுமியின் வீட்டை மழை வெள்ளம் சூழ்ந்ததால் உணவு உள்ளிட்ட எந்த உதவியுமின்றி தவித்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த நூறாண்டில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் சுமார் 370-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடு, உடமைகளை இழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட நடிகை சீதாலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் மீட்பு படையினர் உதவியுடன் மீட்கப்பட்டார்.

உதவி கேட்டு சீதாலட்சுமி வெளியிட்ட வீடியோ:


அந்த வீடியோவில் சீதாலட்சுமி கூறியிருந்ததாவது, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் தவிக்கிறோம். மின்சாரமும் இல்லை. பாதுகாப்பற்ற நிலையில் உள்ளோம், இங்கு குழந்தைகளும், வயதானவர்களும் உள்ளதால் எங்களை காப்பாற்ற எதாவது செய்யுங்கள் என கோரியிருந்தார். இதையடுத்து, சீதாலட்சுமி மற்றும் அவருடன் இருந்தவர்கள் தற்போது பாதுகாப்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அவரே சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மீட்கப்பட்ட பின்னர் சீதாலட்சுமி வெளியிட்ட வீடியோ:


கேரள மழை வெள்ளத்துக்கு கேரள நடிகர், நடிகைகளும் தப்பவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் பிரிதிவிராஜின் வீட்டுக்குள் வெள்ளம் சென்றதையடுத்து, மீட்புப் படையினர் அவரின் வீட்டுக்குள் சென்று அவரின் தாயைப் பாதுகாப்பாக மீட்டனர். நடிகர் ஜெயராமும் அவரின் குடும்பத்தினரும் காரில் நேற்றுமுன்தினம் சென்ற போது, நிலச்சரிவில் சிக்கினார்கள். பின்னர் இந்தத் தகவல் அறிந்து மீட்புப் படையினர் வந்து அவர்களை மீட்டனர். அதேபோல் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நடிகை அனன்யாவும் பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. #KeralaFloods #KeralaFloodRelief #SaveKerala #Seethalakshmi

Tags:    

Similar News