சினிமா செய்திகள்
மீண்டும் இணையும் மம்மூட்டி - கலித் ரஹ்மான் கூட்டணி!
- 'மார்கோ' படத்தை தயாரித்த கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- நியோக் திரைக்கதை எழுதுகிறார் .
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தள்ளுமலா, ஆலப்புழா ஜிம்கானா, அனுராக கரிக்கின் வெள்ளம் போன்ற படங்களை இயக்கிய மலையாளத் திரைத்துறையின் முக்கிய இளம் இயக்குநரான கலித் ரஹ்மான் இப்படத்தை இயக்குகிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'உண்டா' படத்திற்குப் பிறகு இந்த கூட்டணி இணையும் இரண்டாவது படம் இதுவாகும். நடிகர் உன்னி முகுந்தனின் ஆக்ஷன் த்ரில்லர் படமான 'மார்கோ' படத்தை தயாரித்த கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரஹ்மான் இயக்கும் இந்தப் படத்திற்கு நியோக் திரைக்கதை எழுதுகிறார் .
நடிகர்கள், மற்ற தகவல்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.