தாய் கிழவி படத்தின் Script to Screen வீடியோ வெளியானது
- தாய் கிழவி திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
- தாய் கிழவி திரைப்படம் வருகிற 27ஆம் தேதி வெளியாகிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். 'தாய் கிழவி' திரைப்படம் வருகிற 27ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 'தாய் கிழவி' படத்தின் Script to Screen வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இந்தப் படம் தொடக்கம் முதல் ரிலீஸ் வரையிலான பணிகளின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.