ஓ பட்டர்பிளை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்..!
- இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
- இந்தப் படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் விஜய் ரங்கநாதன் எழுதி, இயக்கி இருக்கும் "ஓ பட்டர்பிளை". ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. "ஓ பட்டர்பிளை" படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதல் மற்றும் திகில் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், "ஓ பட்டர்பிளை" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் `போகாதே' நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. விக்னேஷ் ஸ்ரீகாந்த் வரிகளில் கபில் கபிலன் பாடியிருக்கும் இந்தப் பாடல் நாளை வெளியாகிறது.