சினிமா செய்திகள்
மிஸ்கின் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள டிரெயின் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
- இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
- கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.
இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் "டிரெயின்" என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், 'டிரெயின்' படத்தின் முதல் பாடல் அடுத்த 48 மணி நேரங்களில் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.