சினிமா செய்திகள்
null

தாலி வாங்க பணம் கொடுத்து உதவிய மம்முட்டி - மதம் குறித்து ஸ்ரீனிவாசன் பேசிய பழைய வீடியோ வைரல்

Published On 2025-12-21 15:19 IST   |   Update On 2025-12-21 15:24:00 IST
  • 225 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் ஸ்ரீனிவாசன் நடித்துள்ளார்.
  • தனது நகைக்சுவை நடிப்பால் தமிழக ரசிகர்களையும் ஸ்ரீனிவாசன் கவர்ந்தவர்.

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் காலமானார். 69 வயதான ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

225 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீனிவாசன், சமூகத்தில் நடக்கும் விஷயங்களை தனது காமெடி வாயிலாக வெளிப்படுத்தி ரசிகர்களால் கவரப்பட்டவர்.

மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமாக்களிலும் நடித்துள்ள அவர், தனது நகைக்சுவை நடிப்பால் தமிழக ரசிகர்களையும் கவர்ந்தவர். திரைப்பட துறையில் நடிப்பு மட்டுமின்றி, பல படங்களில் இயக்குனராகவும் இருந்துள்ளார். மேலும் திரைக்கதை எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் இயக்கிய பல படங்கள் மாநில மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீனிவாசன் உயிரிழந்த பிறகு மம்முட்டி குறித்தும் மதம் குறித்தும் அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் "தனக்கு திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. ஆனால் அதற்கான அடிப்படை செலவுக்குக் கூட என்னிடம் பணம் இல்லை. அப்போது அப்போது இன்னசென்ட் (குணசித்திர நடிகர்) தனது மனைவி ஆலிஸின் வளையல்களை அடகு வைத்து ரூ. 400 கொடுத்து உதவினார்

தனது தாயார், இந்து முறையில் தாலி கட்டவேண்டும் என்று வற்புறுத்தினார். அதற்காக மம்முட்டியிடம் தாலிக்குத் தங்கம் வாங்க ரூ.2000 கேட்டேன். அவரும் தந்து உதவினார். அந்த பணத்தில் தாலி வாங்கி, அடுத்த நாள் நானும் விமலாவும் ரெஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்து கொண்டும்.

என் திருமணத்திற்கு ரூ.400 கொடுத்தவர் ஒரு கிறிஸ்தவர். ஒரு முஸ்லிம் மம்மூட்டி தாலி வாங்க கொடுத்த பணத்தால் என் இந்து மனைவிக்கு தாலி கட்டினேன். என்ன மதம், யாருடைய மதம், அது எங்கே இருக்கிறது? வாழ்க்கையில் மதம் முக்கியமில்லை, மனிதனும் மனிதநேயமும் தான் முக்கியம்" என்று ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

நடிகர் ஸ்ரீனிவாசன் நம்மை விட்டு மறைந்தாலும், அவர் கூறிய இந்த மனிதநேயக் கதை நமக்கு வழிகாட்டும் விளக்காக இருக்கும் என்றால் அது மிகையாகாது.

Full View
Tags:    

Similar News