'குற்றம் கடிதல் 2' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது
- தேனி, சிறுமலை உள்ளிட்ட தென்னிந்திய இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
- படத்தின் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தேசிய விருது பெற்ற 'குற்றம் கடிதல்' படத்தின் தொடர்ச்சியான 'குற்றம் கடிதல் 2' தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தில் முன்னணி வேடத்தில் JSK சதீஷ்குமார் நடித்தும், தயாரித்தும் உள்ளார்.
தேனி, சிறுமலை உள்ளிட்ட தென்னிந்திய இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு பள்ளி ஆசிரியை ஓய்வு பெறும் முன் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை சந்திக்கும் கதையே இப்படத்தின் மையமாகும்.
இப்படத்தில் பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், சந்தினி தமிழரசன், வீஜி சந்திரசேகர், ஜோவிதா, ரோஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், 'குற்றம் கடிதல் 2 படத்தின்' படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.