னந்த் முருகன் மதுரையையே ஆட்டிப்படைக்கும் பிரபல ரவுடியின் சிஷ்யனாக இருக்கிறார்.பின்னர், ஆனந்த் முருகன் குருவின் இடத்தை பிடித்து மதுரையில் மேலோங்கி நிற்கிறார்.
ஆனந்த் முருகனை கதையின் நாயகன பாலஹாசன் தனது நண்பர்ளுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிடுகிறார். இவர், அப்பா, அம்மா, மனைவி, குழந்தை என குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் ஆனந்த் முருகனை கொலை செய்ய திட்டிமிடுகிறார்.
பாலஹாசன், மதுரையின் மிகப்பெரிய சக்தியாக திகழும் ரவுடி ஆனந்த் முருகனை கொலை செய்ய முயற்சிப்பது ஏன் ? அவரது முயற்சி வெற்றி பெற்றதா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதிகதை.
நடிகர்கள்
அறிமுக நடிகர் ஆனந்த் முருகன் ரவுடி கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருக்கிறார்.மிக நேர்த்தியாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாலஹாசன், படத்திற்கு படம் கதாபாத்திரங்களில் வித்தியாசத்தை காட்டுவதோடு, தனது நடிப்பிலும் வேறுபாட்டை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்கிறார்.
சீரியல் நாயகன் ஸ்ரீதேவா, யாசர், விஜே ஆண்ட்ரூஸ் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திருக்கிறார்கள்.
நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, சோசியல் மீடியா மோகத்தினால் வாழ்க்கையை தொலைக்கும் பெண்களை எச்சரிக்கும் விதமாக நடித்திருக்கிறார்.
இயக்கம்
மதுரையை ஆட்டிப்டைக்கும் அசாதாரண மனிதன் ஒருவனை சாதாரணமான ஒருவன் வீழ்த்த முடிவு செய்வதும், அந்த முடிவை செயல்படுத்த போராடுவதையும் விறுவிறுப்பாக காட்டியிருகிறார். படத்தில் ஆங்கங்கே தொய்வும் இருக்கிறது. கதை ஓட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலம்.
இசை
ரகு நந்தனின் இசையில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் கேட்கும் ரகம். ஜோஸ் ஃபிராங்கிளினின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைக்கதைக்கு பலம்.
ஒளிப்பதிவு
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் குகநேசன் சோனைமுத்து, பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்துவிடுகிறார்.
ரேட்டிங்- 2/5