சினிமா செய்திகள்

'ஹாப்பி ராஜ்' படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு

Published On 2025-12-20 18:18 IST   |   Update On 2025-12-20 18:18:00 IST
  • ஹாப்பி ராஜ் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார்.
  • ஹாப்பி ராஜ் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹேப்பி ராஜ் படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News