சினிமா செய்திகள்

சுற்றியுள்ள அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும்- செல்வராகவனின் வலைத்தள பதிவால் பரபரப்பு

Published On 2025-12-21 08:06 IST   |   Update On 2025-12-21 08:06:00 IST
  • கணவன்- மனைவி இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவின.
  • திடீரென உங்களுக்கு எல்லாமே தவறாகப் போகும்.

தமிழ் சினிமாவில் காதலை வித்தியாசமான கோணத்தில் சொன்னவர், இயக்குனர் செல்வராகவன். 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். அதோடு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். இவர், தற்போது '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தை இயக்கி வருகிறார். இவர் ஆரம்பத்தில் தன் படங்களில் நடித்த சோனியா அகர்வாலை திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. இதையடுத்து செல்வராகவன், கீதாஞ்சலி என்பவரை மணந்துகொண்டார்.

சமீபத்தில் அவரது மனைவி கீதாஞ்சலி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள செல்வராகவனுடனான புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியதாக கூறப்பட்டது. இதனால் கணவன்- மனைவி இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவின.

இந்த நிலையில் செல்வராகவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில்,''திடீரென உங்களுக்கு எல்லாமே தவறாகப் போகும். சுற்றியுள்ள அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். 'நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டிருப்பேன்' என்று பிதற்றுவீர்கள். அதுபோன்ற நேரங்களில் அமைதியாக இருங்கள். சில காலத்தில் பெரும் மலை, பனியாய் போகும். அனைத்தும் சரியாகிவிடும்" என்று கூறியுள்ளார்.

இந்தப் பதிவின் மூலம், செல்வராகவனின் குடும்பத்தில் ஏதோ ஒரு பிரச்சனை நடந்திருப்பது உறுதியாகி உள்ளது. அதைத்தான் இந்தப் பதிவின் மூலம் அவர் சொல்லியிருக்கிறார் என்று பலரும் பின்னூட்டம் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News