சினிமா செய்திகள்

பூக்கி படத்தின் லவ் அட்வைஸ் பாடல் வெளியானது

Published On 2025-12-20 16:36 IST   |   Update On 2025-12-20 16:36:00 IST
  • சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி’ இயக்குகிறார்
  • இந்த பாடலுக்கு வரிகள் எழுதி விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

சென்னை:

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். தற்போது இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி' என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.

சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி' இயக்குகிறார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Full View

2கே தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் "லவ் அட்வைஸ்" என்ற பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்திருந்த நிலையில் பாடல் வெளியானது. இந்த பாடலுக்கு வரிகள் எழுதி விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

Tags:    

Similar News