சினிமா செய்திகள்

பா.ஜ.க.வில் இணைந்த விஜயகாந்த் பட நடிகை

Published On 2025-12-21 05:01 IST   |   Update On 2025-12-21 05:01:00 IST
  • ஆந்திராவைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ஆம்னி.
  • கமல்ஹாசன், மம்முட்டி, விஜயகாந்துடன் ஜோடியாக நடித்துள்ளார்.

ஐதராபாத்:

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ஆம்னி. (52). இவர் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த நாகர்ஜுனா, பாலகிருஷ்ணா, ஜெகபதி பாபு உள்பட பலருடன் நடித்துள்ளார். இவர் கமல்ஹாசனுடனும் நடித்துள்ளார்.

தமிழிலும் தங்கமான தங்கச்சி, ஆனஸ்ட்ராஜ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர் காஜா மொய்தீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1992-ல் வெளியான முதல் சீதனம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.

இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் ராமசந்திர ராவ் முன்னிலையில் நடிகை ஆம்னி பா.ஜ.க.வில் இணைந்தார். அவருடன் பிரபல மேக் அப் ஆர்டிஸ்ட் சோபா லதாவும் பா.ஜ.க.வில் இணைந்தார்.

Tags:    

Similar News