search icon
என் மலர்tooltip icon
    • 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
    • வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி அசாம் 46.31%, பீகார் 33.80%, சத்தீஸ்கர் 53.09%, ஜம்மு-காஷ்மீர் 42.88%, கர்நாடகா 38.23%, கேரளா 39.26%, மத்தியபிரதேசம் 38.96%, மகாராஷ்டிரா 31.77%, மணிப்பூர் 54.26%, ராஜஸ்தான் 40.39%, திரிபுரா - 54.47%, உ.பி.யில் 35.73%, மேற்கு வங்காளம் 47.29% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    • புதுச்சேரி பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வெளியீடு.
    • அரசு, தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கோடை விடுமுறைகள் 29.04.2024 முதல் தொடங்கும்.

    கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மேற்குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய குறிப்புடன், புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலப் பணிகள் இயக்குநரால் வெளியிடப்பட்ட தீவிர வெப்பம் / வெப்ப அலைக்கான பொது சுகாதார ஆலோசனையின் தொடர்ச்சியாக, அனைத்து அரசுகளுக்கும்/தனியார்/சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கோடை விடுமுறைகள் 29.04.2024 முதல் தொடங்கும்.

    இதேபோல், கோவை விடுமுறை முடிந்து 06.06.2024 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




     


    • அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களிடம் இருந்து ராணுவ பணியை பறித்தார்.
    • 20 முதல் 25 பேரை கோடீஸ்வரர்களாக்கி, அவர்களுக்கு நாட்டின் வளத்தை கொடுத்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    நீங்கள் பிரதமர் மோடியின் பேச்சை கேட்டிருப்பீர்கள். அவர் பயப்படுகிறார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களிடம் இருந்து ராணுவ பணியை பறித்தார். 20 முதல் 25 பேரை கோடீஸ்வரர்களாக்கி, அவர்களுக்கு நாட்டின் வளத்தை கொடுத்துள்ளார்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    400 இடங்களில் வெற்றி என்பதை இலக்காக வைத்து பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது. முதல் கட்ட தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்கவில்லை. இதனால் பா.ஜனதா பிரச்சனையை திசைதிருப்ப முயற்சிக்கிறது என காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. பாஜனதாவுக்கு 150 இடங்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை எனவும் காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது.

    • பிரியங்காவுக்கு நெருக்கடி கொடுக்கவே வருண்காந்தியை முன்னிலைப்படுத்த அமித்ஷா திட்டமிட்டு இருந்தார்.
    • வேறு சாதாரண வேட்பாளரை நிறுத்தினால் பிரியங்கா சில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் தொகுதியாகும்.

    காங்கிரஸ் தலைவர் சோனியா அந்த தொகுதியில் இருந்துதான் பாராளுமன்றத்துக்கு தேர்வானார். இந்த தடவை அந்த தொகுதியில் பிரியங்காவை போட்டியிட வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காகவே சோனியா அங்கு போட்டியிடுவதை தவிர்த்து மேல்சபை எம்.பி.யாகி இருக்கிறார்.

    முதன் முதலாக தேர்தல் களத்துக்கு வரும் பிரியங்காவுக்கு முதல் தேர்தலிலேயே நெருக்கடி கொடுத்து தோல்வியை பெரியதாக கொடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவும் தீவிரமாகி உள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இது தொடர்பாக பல தடவை ஆய்வு செய்தனர்.

    இறுதியில் மேனகா காந்தியின் மகன் வருண்காந்தியை பிரியங்காவுக்கு எதிராக களம் இறக்கலாம் என்று முடிவு செய்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் வருண்காந்தியை அழைத்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களது திட்டத்தை அறிந்த வருண்காந்தி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    வருண்காந்தி பிரியங்காவின் தம்பி ஆவார். அவர் உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் இருந்து 2 தடவை பாராளுமன்றத்துக்கு எம்.பி.யாக தேர்வாகி உள்ளார். இந்த தடவையும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்து இருந்தார்.

    ஆனால் அவருக்கு அந்த தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை. பிரியாங்கவை எதிர்த்து ரேபரேலி தொகுதியில் போட்டியிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டார். ஆனால் சகோதரியை எதிர்த்து தன்னால் போட்டியிட இயலாது என்று வருண்காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

    பிரியங்காவுக்கு நெருக்கடி கொடுக்கவே வருண்காந்தியை முன்னிலைப்படுத்த அமித்ஷா திட்டமிட்டு இருந்தார். வருண்காந்தி மறுத்து உள்ளதால் அமித்ஷா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். வேறு சாதாரண வேட்பாளரை நிறுத்தினால் பிரியங்கா சில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    இது காங்கிரஸ் கட்சிக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் மாறி விடும் என்று பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்கள். அந்த நிலையை தடுத்து நிறுத்தவே வருண்காந்தி உதவியை அவர்கள் நாடினார்கள். ஆனால் வருண்காந்தி மறுத்து விட்டதால் வேறு யாரை பிரியங்காவை எதிர்த்து நிறுத்தலாம் என்று ஆலோசித்து வருகிறார்கள்.

    முன்னாள் மத்திய மந்திரி உமாபாரதியை பிரியங்காவுக்கு எதிராக நிறுத்தலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பஜ்ரங்தள் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான வினய் கத்தியர், சமாஜ்வாடி முன்னாள் தலைவர் மனோஜ்பாண்டே மற்றும் அரச குடும்பத்தை சேர்ந்த ராகேஷ் பிரதாப்சிங் ஆகியோரது பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

    • அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்த தகவல்களை மீடியா மூலம் மந்திரிகளுக்கு தெரிவித்திருந்தார் அவரது மனைவி.

    டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மே 7-ந்தேதி வரை அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், டெல்லி மாநில மந்திரியுமான அதிஷி தெரிவித்துள்ளார்.

    நாளை கிழக்கு டெல்லி தொகுதியில் ரோடு ஷோ நடத்துகிறார். நாளை மறுதினம் மேற்கு டெல்லியில் ரோடு ஷோ நடத்துகிறார் என அதிஷி தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. மொத்தமுள்ள ஏழு தொகுதிகளில் கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி, நியூ டெல்லி ஆகிய இடங்களில் ஆத் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது.

    காங்கிரஸ் கட்சி வடகிழக்கு டெல்லி, வடமேற்கு டெல்லி, சாந்த்னி சவுக் ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் கைதானதில் இருந்து அவருக்கும், ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களும் இடையில் தகவல்களை பரிமாறுவதில் பாலமாக உள்ளார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாக டெல்லி மக்கள் மற்றும் டெல்லி மந்திரிகளுக்கு மூன்று முறை மீடியா மூலம் தகவல்களை பரிமாறியுள்ளார்.

    • தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின் போது மகளிர் குழுக்களுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டன.
    • ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது.

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தினந்தோறும் விதவிதமான அறிவிப்புகளை அறிவித்து வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.

    ஸ்ரீகாக்குளம் பகுதியில் பிரசாரம் செய்த சந்திரபாபு நாயுடு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன் என வாக்குறுதி அளித்தார்.

    தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின் போது மகளிர் குழுக்களுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டன. அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த தனி பஜார் நிறுவப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு 3 சென்ட நிலத்தில் வீடுகள் கட்டித் தரப்படும்.

    மேலும் முதியோர் ஓய்வூதியம் ரூ.4000 ஆக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6000 வழங்கப்படும் என்றார். ஏற்கனவே ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்.

    மாதந்தோறும் உதவித் தொகை என சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு மேலும் பெண்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

    இதன் மூலம் பெண்களின் கவனம் ஒட்டுமொத்தமாக தெலுங்கு தேசம் கட்சி பக்கம் திரும்பி இருப்பதாக அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    • சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கலந்துகொண்டார்.
    • இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குவதாக வெளியாகியது.

    பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. சமீபத்தில், இவர் இயக்கிய படம் ஜெயிலர்.

    இதில், ரஜினிகாந்த், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

    அதிரடி சண்டை படமாக தயாரான இப்படம் கடந்த வருடம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி உலகளவில் ரூ.650 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப்படைத்தது. இந்நிலையில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குவதாக வெளியாகியது.

    சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நீங்கள் லியோ படத்தை எடுத்திருந்தால் யாரை நடிக்க வைத்திருப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்,

    நான் லியோ படத்தை இயக்கி இருந்தால் விஜய்யுடன் ஷாருக்கான், மம்மூட்டி மற்றும் மகேஷ் பாபுவை நடிக்க வைத்திருப்பேன். மேலும், கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் ஆலியாபட்டை தேர்ந்தெடுத்திருப்பேன். இவ்வாறு கூறினார். பின் யாரை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிரது என்ற கேள்விக்கு மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க ஆசைபடுகிறேன் என்ரு பதிலளித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'இடி மின்னல் காதல்' திரைப்படம். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
    • ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இணைந்து ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது டியர் திரைப்படம்.

    ஏப்ரல் 5 ஆம் தேதி பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாகூர் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் "தி ஃபேமிலி ஸ்டார்". இத்திரைப்படம் தற்பொழுது ஓடிடி தளமான அமேசான் பிரைமில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

    மார்ச் 29 ஆம் தேதி மாலிக் ராம் இயக்கத்தில் சித்து ஜொனலகட்டா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்து வெளியாகியது 'டில்லு ஸ்கொயர்' திரைப்படம். படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாகத்தை போலவே இத்திரைப்படமும் வெற்றியடைந்தது. படம் இதுவரை 120 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

     

    பாஸ்கல் வெடிமுத்து இயக்கத்தில் திரவ் , எம்.எஸ் பாஸ்கர் மற்றும் இஸ்மத் பானு நடிப்பில் கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியான் திரைப்படம் 'வெப்பம் குளிர் மழை'. கிராமத்து பின்னணியில் ஒரு குழந்தையின்மை தம்பதிகள் படும் கஷ்டத்தை கூறும் கதையாக அமைந்திருக்கும் இத்திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    பாலாஜி மாதவன் இயக்கத்தில் சிபி, பாவ்யா, யாஸ்மின் பொன்னப்பா, ராதா ரவி மற்றும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியாகியது 'இடி மின்னல் காதல்' திரைப்படம். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இணைந்து ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது டியர் திரைப்படம். குறட்டை விடும் மனைவியும் அதனால்  கஷ்டப்படும் கணவனின் பற்றிய கதையாகும். வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் திரும்பப் பெற விரும்புகிறார்கள்.
    • திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாநிலத்தில் மோதலில் இருப்பது போல் பாசாங்கு செய்கின்றன.

    கொல்கத்தா:

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலம் வடக்கு மால்டாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    இந்தியாவின் வளர்ச்சிக்கு மேற்கு வங்காளம் ஒரு காலத்தில் உந்துதலாக இருந்தது. சமூக சீர்திருத்தங்கள், அறிவியல், தத்துவ, ஆன்மிக முன்னேற்றங்கள் மற்றும் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தாலும் கூட முக்கிய பங்காற்றியது. ஆனால் முதலில் இடதுசாரிகளும் பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தின் பெருமையையும், மரியாதையையும் குலைத்து, வளர்ச்சியைக் கூட தடுத்தது.

    திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்காளத்தில் பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே நிலவுகிறது. மத்திய அரசு வழங்கிய நிதி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த கட்சி செய்த ஊழல்களுக்கு மக்கள் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தன. அதே நிலைதான் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் அவர்களுக்கு காத்திருக்கிறது.

    நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் திரும்பப் பெற விரும்புகிறார்கள். இந்திய கூட்டணி 370-வது பிரிவை ரத்து செய்ய விரும்புகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் சொல்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தின் பல பயனாளிகளில் தலித்துகளும் அடங்குவர். இந்திய கூட்டணி உங்களது சொத்துக்களை கொள்ளையடிக்க பார்க்கிறது.

    ஏழை மக்களின் சொத்துக்கள் அனைத்தையும் விசாரிக்கப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து எக்ஸ்ரே மிஷின் கொண்டு வந்து, நாட்டில் உள்ள அனைவருக்கும் எக்ஸ்ரே எடுப்பார்கள், நகை, சொத்து உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றி, அதில் ஒரு பகுதியை தங்கள் வாக்கு வங்கிக்கு கொடுக்க நினைக்கின்றனர். ஆனால் அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாமல் திரிணாமுல் காங்கிரஸ் அமைதி காத்து ஆதரவளிக்கிறது.

    வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு உங்களது நிலங்களை கொடுத்து அவர்களை இங்கு திரிணாமுல் காங்கிரஸ் குடியமர்த்துகிறது. இந்த வாக்கு வங்கிக்கு உங்கள் சொத்துக்களை கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. நீங்கள் உயிருடன் இருக்கும்போதும், இறந்த பிறகும் கூட காங்கிரஸ் உங்களை கொள்ளையடிக்கும்.

    திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாநிலத்தில் மோதலில் இருப்பது போல் பாசாங்கு செய்கின்றன. ஆனால் உண்மையில் இந்த இரு கட்சிகளின் குணமும் சித்தாந்தமும் ஒன்றுதான். திருப்திப்படுத்துவது அந்த கட்சிகள் இடையே பொதுவான விஷயம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
    • இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானில் பாகிடோரா தொகுதியில் 31% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    மேற்கு வங்காளம்:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலில் 11 மணி நிலவரப்படி அசாம் 27.43%, பீகார் 21.68%, சத்தீஸ்கர் - 35.47%, ஜம்மு-காஷ்மீர் - 26.61%, கர்நாடகா - 22.34%, கேரளா - 25.61%, மத்தியபிரதேசம் - 28.51%, மகாராஷ்டிரா - 18.83%, மணிப்பூர் - 33.22%, ராஜஸ்தான் - 26.84%, திரிபுரா - 36.42%, உ.பி.யில் 24.31%, மேற்கு வங்காளம் - 31.25% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானில் பாகிடோரா தொகுதியில் 31% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    ×