search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஹிட் லிஸ்ட் படத்தின் டிரைலரை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்
    X

    'ஹிட் லிஸ்ட்' படத்தின் டிரைலரை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்

    • இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் புதிய படம் "ஹிட் லிஸ்ட்".
    • இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் புதிய படம் "ஹிட் லிஸ்ட்". கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சூர்ய கதிர் இயக்குகிறார். இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, பொன்ராம், மித்ரன் ஆர் ஜவஹர், கார்த்திக் சுப்பராஜ், சிறுத்தை சிவா, பேரரசு, கதிர், சரண், எழில், இராஜ குமாரன், சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின், ஆர்.வி. உதயகுமார், பி. வாசு ஆகியோர் கலந்து கொண்டனர். சமீபத்தில் படக்குழுவை நடிகர் விஜய் , சூர்யா உள்ளிட்டோர் பாராட்டினர்.

    இந்நிலையில் படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது எகஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டிரைலர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஒரு சைக்கோ கொலைக்காரன் வித்தியாசமான முறையில் கதாநாயகனின் குடும்பத்தை கொலை செய்கிறான். அதை எப்படி கதாநாயகன் காப்பாற்றுகிறார் போன்ற காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×