என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், அட்ரினோ 506 GPU வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 3 ஜிபி ரேம் / 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் / 64 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி எம்02எஸ்

    மேலும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5,  5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் அட்பாடிவ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் புளூ, ரெட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 8999 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 9999 என்றம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    போக்கோ பிராண்டின் ஸ்மார்ட்போன் மாடல்கள் விலை இந்தியாவில் நிரந்தரமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.


    போக்கோ பிராண்டு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் நிரந்தரமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பு போக்கோ எம்2, போக்கோ எம்2 ப்ரோ மற்றும் போக்கோ எக்ஸ்3, போக்கோ சி3 தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு வழங்கப்படுகிறது.

    போக்கோ சி3 ஸ்மார்ட்போனின் (4ஜிபி + 64 ஜிபி) மாடல் விலை ரூ. 8999-இல் இருந்து தற்சமயம் ரூ. 8499 என மாறி இருக்கிறது. இதேபோன்று போக்கோ எம்2 (6ஜிபி + 64 ஜிபி) மாடல் விலை ரூ. 10999-இல் இருந்து தற்சமயம் ரூ. 9999 என்றும் போக்கோ எம்2 (6ஜிபி + 128 ஜிபி) மாடல் விலை ரூ. 12499-இல் இருந்து தற்சமயம் ரூ. 10999 என மாறி இருக்கிறது.

    போக்கோ எம்2 ப்ரோ (4ஜிபி + 64 ஜிபி) மாடல் விலை ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 12999 என மாறி இருக்கிறது.
    போக்கோ எம்2 ப்ரோ (6ஜிபி + 64 ஜிபி) மாடல் விலை ரூ. 14999-இல் இருந்து தற்சமயம் ரூ. 13999 என்றும் போக்கோ எம்2 ப்ரோ (6ஜிபி + 128 ஜிபி) மாடல் விலை ரூ. 16999-இல் இருந்து தற்சமயம் ரூ. 15999 என மாறி இருக்கிறது.

    போக்கோ எக்ஸ்3 (6ஜிபி + 128 ஜிபி) மாடல் விலை ரூ. 18499-இல் இருந்து தற்சமயம் ரூ. 17999 என மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் தற்சமயம் குறைக்கப்பட்ட புது விலையில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் இவற்றின் விலை மேலும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 45 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் 45 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடலில் முதல்முறையாக ஒன்பிளஸ் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கி இருந்தது.

    ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடலில் 30 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டது. தற்சமயம் சியோமி மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் உடனான போட்டியை எதிர்கொள்ள ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் 45 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

     ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் மட்டுமின்றி ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என தெரிகிறது. 

    ஒன்பிளஸ் 9 சீரிசில் ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9 லைட் என மூன்று ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் ஒன்பிளஸ் 9 லைட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடல்களில் ஸ்னாப்டிராகன் 888 5ஜி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ. 20,999 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.67-இன்ச் FHD+LCD ஸ்கிரான், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், அடாப்டிவ் சின்க் ரிப்ரெஷ் ரேட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் மற்றும் ஸ்னாப்டிராகன் எக்ஸ்52 மோடெம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பிராசஸர் 5ஜி SA/NSA வசதி வழங்குகிறது. புகைப்படங்களை எடுக்க 108 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி சூப்பர் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

     சியோமி எம்ஐ 10ஐ

    சியோமி எம்ஐ 10ஐ சிறப்பம்சங்கள்

    - 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
    - அட்ரினோ 619 GPU
    - 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.75, LED பிளாஷ்
    - 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.45
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP53)
    - 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - 4820 எம்ஏஹெச் பேட்டரி
    - 33வாட் பாஸ்ட் சார்ஜிங்

    இந்தியாவில் புதிய சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20,999, 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,999 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 23,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமேசான் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அறிமுகமான கேலக்ஸி எம்01எஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புது ஸ்மார்ட்போன் வெளியீடு அமேசான் தளத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் அடங்கிய வலைப்பக்கம் அமேசான் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் HD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 4 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி கொண்டிருக்கும் என்பதை சாம்சங் உறுதிப்படுத்தி இருக்கிறது. 

     சாம்சங் கேலக்ஸி எம்02எஸ்

    சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

    - 6.5-இன்ச் HD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
    - ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர்
    - 3 ஜிபி ரேம் / 32 ஜிபி மெமரி 
    - 4 ஜிபி ரேம் / 64 ஜிபி மெமரி
    - 13 எம்பி பிரைமரி கேமரா
    - 2 எம்பி  + 2 எம்பி கேமரா
    - 8 எம்பி செல்பி கேமரா
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி

    புதிய கேலக்ஸி எம்02எஸ் மாடல் ஸ்டிரீமிங், கேமிங், புகைப்படம் மற்றும் பிரவுசிங் அனுபவத்தை சிறப்பாக வழங்கும் என சாம்சங் தெரிவித்து உள்ளது. இதற்கென சாம்சங் டீசர் வீடியோவை வெளியிட்டு உள்ளது. 

    இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 3 ஜிபி ரேம் / 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் / 64 ஜிபி மெமரி என இரு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் 4 ஜிபி வேரியண்ட் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அந்நிறுவனம் முன்னணி இடம் பிடிக்க இந்த சீரிஸ் பெரிதும் உதவியாக இருந்தது.

    2020 ஆண்டு சாம்சங் நிறுவனம் சுமார் 1.5 கோடி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி இருக்கிறது. இதன் மூலம் சாம்சங் நிறுவனம் 38 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. 
    சியோமியின் புதிய எம்ஐ 11 ஸ்மார்ட்போன் விற்பனையில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    சியோமி நிறுவனம் கடந்த வாரம் புதிய எம்ஐ11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஐந்தே நிமிடங்களில் 3,50,000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. சீன சந்தையில் சியோமி எம்ஐ 11 விற்பனை ஜனவரி 1 ஆம் தேதி துவங்கி நடைபெற்றது.

    ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போனாக சியோமி புதிய எம்ஐ11 வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 1500 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. 

     சியோமி எம்ஐ 11

    சியோமி குழும துணை தலைவரும், ஸ்மார்ட்போன் பிரிவு தலைவர் செங் யூஹோங் சியோமி எம்ஐ 11 ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய ஐந்தே நிமிடங்களில் 3,50,000 யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்தார்.

    அந்த வகையில் சியோமி எம்ஐ11 விற்பனையில் இருந்து இந்திய மதிப்பில் ரூ. 1677 கோடிகளை ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விற்பனை துவங்கிய 7 மணி நேரத்தில் 8,54,000 யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது.

    சியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 ஸ்மார்ட்போன் விலை இந்திய மதிப்பில் ரூ. 45 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 52,800 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போனிற்கு புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படுகிறது.


    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.0 அப்டேட் வழங்கி வருகிறது. முன்னதாக இதே அப்டேட் கேலக்ஸி நோட் 20, கேலக்ஸி எஸ்20 மற்றும் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் மாடல்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

    புதிய ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.0 அப்டேட் F700FxXx3CTLx எனும் பர்ம்வேர் வெர்ஷன் கொண்டிருக்கிறது. அளவில் இது 2,014.37MB ஆக இருக்கிறது. தற்சமயம் இந்த அப்டேட் ஆசியா, ஐரோப்பியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளில் வழங்கப்படுகிறது.

     கேலக்ஸி இசட் ப்ளிப்

    புது அப்டேட் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.0 சார்ந்த அம்சங்களை கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போனிற்கு வழங்குகிறது. இதில் மேம்பட்ட யுஐ டிசைன், சிறப்பான அனிமேஷன், சாட் பபிள்கள், மேம்பட்ட ஸ்டாக் ஆப், லாக் ஸ்கிரீன் விட்ஜெட்கள், மேம்பட்ட செக்யூரிட்டி மற்றும் செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் புதிய பிரைவசி கண்ட்ரோல்கள், ஒன்-டைம் பர்மிஷன்கள், மேம்பட்ட டிஜிட்டல் வெல்பீயிங் அம்சங்கள் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. பிரீமியம் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒன்யுஐ 3.0 அப்டேட் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி எம்31 மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்01 மற்றும் கேலக்ஸி எம்01எஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் இயர்போன் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது. இரு கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி கேலக்ஸி பட்ஸ் பிளஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் லைவ் வயர்லெஸ் இயர்போன் விலையும் குறைக்கப்பட்டு இருக்கிறது.

    விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி எம்01 விலை ரூ. 500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 7499 என்றும் கேலக்ஸி எம்01எஸ் விலை ரூ. 1499 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 8999 என்றும் மாறி இருக்கிறது. இரு மாடல்களின் புதிய விலை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் மாற்றப்பட்டு விட்டது.
     கேலக்ஸி பட்ஸ் லைவ் இதேபோன்று கேலக்ஸி பட்ஸ் பிளஸ் ரூ. 8,990 என்றும் விலை ரூ. 11,990 என மாறி இருக்கிறது. இரு இயர்போன்களின் விலையும் முறையே ரூ. 3 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் புது விலை ஆப்லைன் சந்தையில் மாற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

    முன்னதாக சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்தது. இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ. 17,999 எனும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    விவோ நிறுவனத்தின் புதிய வை20ஏ ஸ்மார்ட்போன் அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    விவோ நிறுவனத்தின் வை20ஏ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் ஹெச்டி பிளஸ் ஹாலோ ஐவியூ டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 436 பிராசஸர், அட்ரினோ 505 ஜிபியு, 3 டிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பன்டச் ஒஎஸ் 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 எஸ் வழங்கப்பட்டு உள்ளது.

     விவோ வை20ஏ

    இத்துடன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய விவோ வை20ஏ ஸ்மார்ட்போன் நெபுளா புளூ மற்றும் டான் வைட் நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் விவோ வை20ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 11,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை சில்லறை விற்பனை மையங்கள், விவோ இந்தியா இ ஸ்டோர் மற்றும் இதர ஆன்லைன் தளங்களில் ஜனவரி 2 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
    இந்திய சந்தையில் சாம்சங் ஸ்மார்ட்போன் மாடலுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மாரட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டு இருக்கிறது. சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ. 21,999 விலையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது.

    அறிமுகமானது முதல் பலமுறை கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி தற்சமயம் இதன் விலை ரூ. 17,999 என மாறி இருக்கிறது. இம்முறை இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது. அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆன்லைன் மட்டுமின்றி விலை குறைப்பு விற்பனை மையங்கள், சாம்சங் ஒபேரா ஹவுஸ், சாம்சங் வலைதளம் மற்றும் முன்னணி ஆன்லைன் தளங்களில் அமலாக இருக்கிறது. 

     கேலக்ஸி ஏ31

    சிறப்பம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ31 மாடலில் 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர், ARM மாலி-G52 GPU, 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0, டூயல் சிம் ஸ்லாட், 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, 8 எம்பி 123° அல்ட்ரா-வைடு ஆங்கில் கேமரா, f/2.2, 5 எம்பி டெப்த் சென்சார், f/2.4, 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4, 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் ப்ரிசம் கிரஷ் பிளாக், ப்ரிசம் கிரஷ் புளூ, ப்ரிசம் கிரஷ் ரெட் மற்றும் ப்ரிசம் கிரஷ் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
    மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸருடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ரியல்மி நிறுவனம் விரைவில் தனது ரியல்மி 8 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ரியல்மி 7 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரியல்மி 8 ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி உள்ளது.

    RMX3092 எனும் மாடல் நம்பர் கொண்ட புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இது ரியல்மி 8 மாடலாக இருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.

    இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10  ஒஎஸ், 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோர் சோதனையில் 2874 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 8088 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. 

    இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் இந்திய தரத்தை உறுதிப்படுத்தும் பிஐஎஸ் வலைதளத்திலும் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×