என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவில் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் விலை ரூ. 69,999 என துவங்குகிறது.

    புதிய பிளாக்ஷிப் சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எஸ்20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனையை சாம்சங் அவசர அவசரமாக நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. 

     கேலக்ஸி எஸ்20 பிளஸ்

    கேலக்ஸி எஸ்20, எஸ்20 பிளஸ் மற்றும் எஸ்20 அல்ட்ரா போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்று தீர்ந்துவிட்டதாக சாம்சங் இந்தியா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் சீனாவுக்கான அதிகாரப்பூர்வ வலைதளங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

    பழைய கேலக்ஸி எஸ் சீரிஸ் மாடல்களை குறைந்த விலையில் வாங்க திட்டமிட்டு இருந்தவர்களுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரப்பூர்வ தளத்தில் விற்று தீர்ந்த போதும், மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட கேலக்ஸி எஸ்20 சீரிஸ் யூனிட்களை விற்பனை செய்யலாம்.

    தற்சமயம் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கேலக்ஸி எஸ்20 எப்இ மாடல் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு சில மாதங்களே நிறைவுற்று இருப்பதால் இதன் விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

    ரியல்மி நிறுவனத்தின் சி12 ஸ்மார்ட்போன் புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் தனது சி12 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரியுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ கொண்டுள்ளது.

     ரியல்மி சி12

    இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மோனோ கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் பவர் புளூ மற்றும் பவர் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரியல்மி சி12 புது வேரியண்ட் விலை ரூ. 9999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய வேரியண்ட்டை விட ரூ. 1000 அதிகம் ஆகும்.
    மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ், 64எம்பி குவாட் கேமரா கொண்ட ஒப்போ ரெனோ5 ப்ரோ 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது.


    ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது ரெனோ5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் OLED ஸ்கிரீன், 32 எம்பி செல்பி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி மோனோ கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஒஎஸ் 11.1, 4350 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் சூப்பர்வூக் 2.0 பிளாஷ் சார்ஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி

    ஒப்போ ரெனோ5 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்

    - 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் OLED HDR+ டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் பிராசஸர்
    - 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - 64 எம்பி பிரைமரி கேமரா
    - 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 32 எம்பி செல்பி கேமரா
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 4350 எம்ஏஹெச் பேட்டரி
    - 65 வாட் பாஸ்ட் சார்ஜிங்
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
    - யுஎஸ்பி டைப் சி

    ஒப்போ ரெனோ5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆஸ்ட்ரல் புளூ மற்றும் ஸ்டேரி பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 35,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விலை இந்திய சந்தையில் மீண்டும் குறைக்கப்பட்டு இருக்கிறது.


    ஒப்போ நிறுவனம் தனது ஏ12 ஸ்மார்ட்போனின் விலையை மீண்டும் குறைத்து இருக்கிறது. விலை குறைப்பு சில்லறை விற்பனை மையங்களில் அமலாகி இருக்கிறது. அந்த வகையில் ஆன்லைன் தளங்களில் இதன் விலையில் இதுவரை எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்தியாவில் ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ. 9990 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதன் விலை ரூ. 1000 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 8990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் விலை குறைப்பின் படி ஒப்போ ஏ12 (3 ஜிபி + 32 ஜிபி) மாடல் ரூ. 8490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ரூ. 10,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 

     ஒப்போ ஏ12

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. 

    இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது சென்சார், 5 எம்பி செல்பி கேமரா, கைரேகை சென்சார்,  ஆண்ட்ராய்டு 9 சார்ந்த கலர்ஒஎஸ், 4230 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
    டூயல் செல்பி கேமரா கொண்ட டெக்னோ கேமான் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    டெக்னோ மொபைல்ஸ் நிறுவனத்தின் புதிய டெக்னோ கேமான் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.85-இன்ச் FHD+ டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, முன்புறம் 48 எம்பி செல்பி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என டூயல் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     டெக்னோ கேமான் 16 பிரீமியர்

    டெக்னோ கேமான் 16 பிரீமியர் சிறப்பம்சங்கள்

    - 6.85-இன்ச் 2460x1080 பிக்சல் 20.5:9 FHD+ LCD ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G90T பிராசஸர்
    - 800MHz Mali-G76 3EEMC4 GPU
    - 8 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஹைஒஎஸ்
    - 64 எம்பி பிரைமரி கேமரா
    - 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 48 எம்பி செல்பி கேமரா
    - 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 4500 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    டெக்னோ கேமான் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் கிளேசியர் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 16,999 என நிர்ணயம்  செய்யப்பட்டு உள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
     

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்21 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை கேலக்ஸி அன்பேக்டு ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களில் முறையே 6.2/6.7 இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2x இன்பினிட்டி ஒ பிளாட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 / எக்சைனோஸ் 2100 பிராசஸர் வழங்கப்படுகிறது.

    இத்துடன் இன் டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1, கேலக்ஸி எஸ்21 5ஜி மாடலில் 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி சென்சார், 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி மாடலில் கூடுதலாக டெப்த் சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.

    இரு ஸ்மார்ட்போன்களிலும் 10 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முறையே 4000 எம்ஏஹெச் மற்றும் 4800 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் அம்சம் வழங்கப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போன் பேண்டம் வைட், பேண்டம் கிரே, பேண்டம் பின்க் மற்றும் பேண்டம் வைலட் நிறங்களிலும் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பேண்டம் வைலட், பேண்டம் சில்வர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களிலும் கிடைக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி இந்திய விலை விவரம்

    கேலக்ஸி எஸ்21 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 69,999
    கேலக்ஸி எஸ்21 5ஜி 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 73,999
    கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 81,999
    கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 85,999

    இரு ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 29 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.
    சியோமி நிறுவனம் தனது எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையில் மட்டும் ரூ. 200 கோடி ஈட்டியதாக தெரிவித்து உள்ளது.


    சியோமி இந்தியா தனது புதிய எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் முதல் விற்பனையில் மட்டும் ரூ. 200 கோடி வருவாய் ஈட்டி இருப்பதாக அறிவித்து உள்ளது. இது அனைத்து தளங்களில் நடைபெற்ற விற்பனையை உள்ளடக்கிய தொகை ஆகும்.

    புதிய எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக பிரைம் சந்தாதாரர்களுக்கு ஜனவரி 7 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ஜனவரி 8 ஆம் தேதி எம்ஐ வலைதளம், எம்ஐ ஹோம் மற்றும் எம்ஐ ஸ்டூடியோஸ் போன்ற தளங்களில் விற்பனைக்கு வந்தது.

    இந்தியாவில் சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அமேசான் இந்தியா தளத்தில் அனைத்து பிரிவுகளில் அதிகம் விற்பனையான பொருட்கள் பட்டியலில் எம்ஐ 10ஐ இடம்பெற்று இருக்கிறது.

    புதிய சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20,999, 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,999 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 23,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     சியோமி எம்ஐ 10ஐ

    சியோமி எம்ஐ 10ஐ சிறப்பம்சங்கள்

    - 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
    - அட்ரினோ 619 GPU
    - 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.75, LED பிளாஷ்
    - 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.45
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP53)
    - 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - 4820 எம்ஏஹெச் பேட்டரி
    - 33வாட் பாஸ்ட் சார்ஜிங்

    ஐகூ பிராண்டின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் உடன் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஐகூ பிராண்டின் ஐகூ 7 பிளக்ஷிப் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, OIS, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 13 எம்பி போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

     ஐகூ 7

    ஐகூ 7 சிறப்பம்சங்கள்

    - 6.62 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 5nm பிராசஸர்
    - அட்ரினோ 660 GPU
    - 8 ஜிபி LPDDR5 ரேம் / 128 ஜிபி (UFS 3.1) மெமரி
    - 12 ஜிபி LPDDR5 ரேம் / 256 ஜிபி (UFS 3.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒரிஜின் ஒஎஸ்
    - டூயல் சிம் 
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ், OIS + EIS
    - 13 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 13 எம்பி போர்டிரெயிட் கேமரா, f/2.46, OIS
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யுஎஸ்பி டைப் சி ஆடியோ
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 
    - யுஎஸ்பி டைப் சி
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி
    - 120 வாட் அல்ட்ரா பாஸ்ட் பிளாஷ்  சார்ஜிங் 

    ஐகூ 7 ஸ்மார்ட்போன் பிளாக்லேண்ட், லேடென்ட் புளூ மற்றும் லெஜண்டரி எடிஷன் மாடல் வைட் நிறத்திலும் திடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 43,065 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 47,620 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்ட புதிய விவோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    விவோ நிறுவனம் தனது வை51ஏ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய விவோ ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் ஹாலோ புல்வியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 8 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 கொண்டிருக்கும் புது விவோ ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     விவோ வை51ஏ

    விவோ வை51ஏ சிறப்பம்சங்கள்

    - 6.58 இன்ச் 2408×1080 பிக்சல் FHD+ LCD 20:9 ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 8 ஜிபி LPDDR4X ரேம் 
    - 128 ஜிபி UFS 2.1 மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 சார்ந்ச பன்டச் ஒஎஸ் 11
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ், EIS
    - 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    விவோ வை51ஏ ஸ்மார்ட்போன் டைட்டானியம் சபையர் மற்றும் க்ரிஸ்டல் சிம்பனி நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

    விவோ நிறுவனம் வி20 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து விவோ எக்ஸ்50 ப்ரோ மற்றும் வி20 ப்ரோ போன்ற மாடல்களுக்கு கடந்த மாதம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட்டது.

    தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் பெறும் இதர விவோ ஸ்மார்ட்போன்கள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

     விவோ

    அதன்படி இம்மாத இறுதியில் விவோ வி19, விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன்களுக்கும் மார்ச் மாத இறுதியில் விவோ வி17, வி17 ப்ரோ, வி15 ப்ரோ மற்றும் விவோ எஸ்1 போன்ற மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதியில் விவோ எஸ்1 ப்ரோ, இசட்1எக்ஸ், இசட்1 ப்ரோ போன்ற மாடல்களுக்கும் ஜூன் மாத இறுதியில் விவோ வி15 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் வழங்குவதாக விவோ நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    முதற்கட்டமாக பீட்டா அப்டேட் பேட்ச்களாக வெளியிடப்பட்டு அதன்பின் ஸ்டேபில் அப்டேட் வழங்கப்படும் என விவோ அறிவித்து உள்ளது. மேற்கண்ட பட்டியலில் விவோ வை சீரிஸ், யு சீரிஸ் மற்றும் சில வி சீரிஸ் மாடல்கள் இடம்பெறவில்லை. இவற்றுக்கு புது ஒஎஸ் அப்டேட் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் இரண்டு கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது.


    இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு திடீர் விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. அதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இவற்றின் விலை கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக அதிகரிக்கப்பட்டது. 

    பின் 2020 செப்டம்பர் மாதத்தில் ஒருமுறையும், அதன் பின் இரண்டாவது முறையாக இவற்றின் விலை குறைக்கப்பட்டது. அந்த வரிசையில் இரு ஸ்மார்ட்போன்களின் விலை மூன்றாவது முறையாக இந்திய சந்தையில் குறைக்கப்பட்டு இருக்கிறது. 

     கேலக்ஸி ஏ71

    புதிய விலை விவரங்கள்

    சாம்சங் கேலக்ஸி ஏ51 (6 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 20,999 
    சாம்சங் கேலக்ஸி ஏ51 (8 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 22,499 
    சாம்சங் கேலக்ஸி ஏ71 (8 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 27,499 

    இம்முறை இரு ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. மாற்றப்பட்ட புதிய விலை தற்சமயம் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பிரதிபலிக்கிறது. விரைவில் இது ப்ளிப்கார்ட், அமேசான் ஆன்லைன் தளங்கள் மற்றும் இதர ஆப்லைன் ஸ்டோர்களிலும் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்21 சீரிஸ் முன்பதிவு சலுகைகளுடன் துவங்கி இருக்கிறது.


    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 3849 மதிப்புள்ள போன் கவர் இலவசமாக வழங்கப்படுகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களை முன்பதிவு செய்வோருக்கு ஸ்மார்ட் டேக், கேலக்ஸி பட்ஸ் லைவ் போன்ற அக்சஸரீக்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது. கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடலை முன்பதிவு செய்வோருக்கு ஸ்மார்ட் டேக் மற்றும் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டது.

     சாம்சங்

    சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி கேலக்ஸி எஸ்21 முன்பதிவு செய்வோருக்கு கவர் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுதவிர கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்21 பிளஸ் போன்ற மாடல்கள் பற்றி சாம்சங் தளத்தில் எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    கேலக்ஸி எஸ்21 முன்பதிவு செய்ய விரும்புவோர் ரூ.2  ஆயிரம் மதிப்புள்ள விஐபி பாஸ் வாங்க வேண்டும். இவர்களுக்கு கேலக்ஸி எஸ்21 வினியோகத்தில் முன்னுரிமை வழங்கப்படும். பின் ஸ்மார்ட்போன் வாங்கும் போது விஐபி பாஸ் பெற செலுத்திய ரூ. 2 ஆயிரம் கழிக்கப்படும்.

    சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி அன்பேக்டு 2021 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிகழ்வு ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
    ×