என் மலர்
மொபைல்ஸ்
ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரெட்மி நோட் 10 இந்திய வெளியீடு விரைவில் நடைபெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் சான்று பெற்று இருப்பதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி வருகிறது. ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது.
தற்சமயம் M2101K7AI எனும் மாடல் நம்பர் கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. சில நாட்களுக்கு முன் இதேபோன்ற மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் எப்சிசி வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதில் ஸ்மார்ட்போனின் அம்சங்களும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் இந்த மாத துவக்கத்தில் ரெட்மி நோட் 10 ப்ரோ பிஐஎஸ் சான்று பெற்று இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் M210K6I எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது. கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களாக ரெட்மி நோட் 9 சீரிஸ் இருந்தது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி குவாட் கேமரா சென்சார், முன்புறம் 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் 5050 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் கிரே, வைட் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ இந்திய விற்பனை துவங்கி உள்ளது.
இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 5ஜி, கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை துவங்கி உள்ளது.
புதிய கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களை வாங்குவோருக்கு கேஷ்பேக் சலுகை, பலன்கள் மற்றும் அப்கிரேடு போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இதுதவிர கேலக்ஸி எஸ்21 பிளஸ் வாங்குவோருக்கு ரூ. 7 ஆயிரமும், கேலக்ஸி எஸ்21 வாங்கும் ஹெச்டிஎப்சி வங்கி கார்டு பயனர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

அப்கிரேடு சலுகையின் படி கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடலுக்கு ரூ. 7 ஆயிரமும், கேலக்ஸி எஸ்21 பிளஸ் மாடலுக்கு ரூ. 6 ஆயிரம் மற்றும் கேலக்ஸி எஸ்21 வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகை பழைய ஸ்மார்ட்போனினை எக்சேன்ஜ் செய்வோருக்கு மட்டும் கிடைக்கும்.
கேலக்ஸி எஸ்20 சீரிஸ், கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மற்றும் கேலக்ஸி எஸ்10, நோட் 10 சீரிஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா வாங்கும் போது ரூ. 10 ஆயிரமும், கேலக்ஸி எஸ்21 பிளஸ் வாங்கும் போது ரூ. 7 ஆயிரமும், கேலக்ஸி எஸ்21 வாங்கும் போது ரூ. 5 ஆயிரம் வரை அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது.
புதிய கேலக்ஸி எஸ்21 சீரிஸ்: பேண்டம் பிளாக், பேண்டம் சில்வர், பேண்டம் வைலட், பேண்டம் வைட், பேண்டம் கிரே மற்றும் பேண்டம் பின்க் நிறங்களில் கிடைக்கிறது.
கேலக்ஸி எஸ்21 சீரிஸ் விலை விவரம்
கேலக்ஸி எஸ்21 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 69,999
கேலக்ஸி எஸ்21 5ஜி 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 73,999
கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 81,999
கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 85,999
கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 1,05,999
கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 16 ஜிபி + 512 ஜிபி மாடல் விலை ரூ. 1,16,999
கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ இயர்போன்களின் விற்பனையும் இந்தியாவில் துவங்கி உள்ளது. விசேஷ சலுகையாக கேலக்ஸி பட்ஸ் ப்ரோ வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் உடனடி கேஷ்பேக் பெற முடியும்.
போக்கோ பிராண்டின் புதிய எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்திய சந்தையில் மற்றொரு போக்கோ ஸ்மார்ட்போன் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. போக்கோ பிராண்டு கடந்த ஆண்டு அறிமுகம் செய்த எம்2 ஸ்மார்ட்போன் தற்சமயம் இந்த மைல்கல் கடந்துள்ளது. போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் 2020 செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விற்பனை மைல்கல் தவிர சியோமி மற்றும் ரியல்மியை தொடர்ந்து மூன்றாவது பெரிய ஆன்லைன் பிராண்டாக போக்கோ இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ரூ. 10,999 மற்றும் ரூ. 12,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு பின் இவற்றின் விலை முறையே ரூ. 9,999 மற்றும் ரூ. 10,999 என குறைக்கப்பட்டது.

போக்கோ எம்2 சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
- ARM மாலி-G52 2EEMC2 ஜிபியு
- 6 ஜிபி LPPDDR4x ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
- 8 எம்பி 118.2° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 2 எம்பி டெப்த் கேமரா
- 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் புதிய கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இதில் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம்.

இத்துடன் மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த ஒன்யுஐ கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி எம்02 விலை ரூ. 7 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்களை இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
5ஜி வசதி கொண்ட புது நோக்கியா ஸ்மார்ட்போன்கள் 2021 ஆண்டின் முதல் காலாண்டு அல்லது இரண்டாம் காலாண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் நோக்கியா 1.4, நோக்கியா 6.4 5ஜி மற்றும் நோக்கியா 7.4 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள் 2021 இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. எனினும், நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி ஹெச்எம்டி குளோபல் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.
நோக்கியா 1.4 என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 6.51 இன்ச் ஹெச்டி எல்சிடி ஸ்கிரீன், 1 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, மூன்று பிரைமரி கேமராக்கள், 5 எம்பி செல்பி கேமரா, 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது.

நோக்கியா 6.4 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா அல்லது 24 எம்பி சென்சார் மற்றும் 12 எம்பி அல்ட்ரா கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம்.
நோக்கியா 7.3 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 24 எம்பி செல்பி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய எக்ஸ்7 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் புதிய எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டை கடந்த வாரம் உறுதிப்படுத்தியது. இந்நிலையில், புதிய ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சீரிசில் ரியல்மி எக்ஸ்7 மற்றும் எக்ஸ்7 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய எக்ஸ் சீரிஸ் இந்திய வெளியீடு பற்றி ரியல்மி இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.
தற்போதைய தகவலில் ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் வெளியீட்டு தேதி கொண்ட அழைப்பிதழ் ட்விட்டரில் வெளியாகி உள்ளது. அழைப்பிதழின் படி பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் ரியல்மி எக்ஸ7 மற்றும் ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 6.4 இன்ச் ஸ்கிரீன், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 64 எம்பி குவாட் கேமரா சென்சார், 32 எம்பி செல்பி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 64 எம்பி குவாட் கேமரா, 32 எம்பி செல்பி கேமரா, 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
எல்ஜி நிறுவனம் இந்தியாவில் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் குவாட் கேமரா சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
எல்ஜி நிறுவனம் இந்தியாவில் புதிய கே சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் கே42 என அழைக்கப்படுகிறது. எல்ஜி கே42 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் புல்விஷன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் எல்ஜி கே42 அமெரிக்க ராணுவ தர-MIL-STD-810G சான்று பெற்று இருக்கிறது. இதில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்பட்டு உள்ளது.

எல்ஜி கே42 சிறப்பம்சங்கள்
- 6.6 இன்ச் 1600x720 பிக்சல் 20:9 ஹெச்டி பிளஸ் புல் விஷன் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
- 650MHz IMG PowerVR GE8320 GPU
- 3 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 5 எம்பி 115° அல்ட்ரா வைடு சென்சார்
- 2 எம்பி மேக்ரோ சென்சார்
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 8 எம்பி செல்பி கேமரா
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- MIL-STD 810G சான்று
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் எல்ஜி கே42 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜனவரி 26 ஆம் தேதி துவங்குகிறது.
போக்கோ பிராண்டின் புதிய சி3 மாடல் ஸ்மார்ட்போன் விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்திய சந்தையில் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் அறிமுகமான குறுகிய காலக்கட்டத்தில் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
புது மைல்கல்லை அறிமுகமான மூன்றே மாதங்களில் போக்கோ எட்டியுள்ளது. விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளதை ஒட்டி போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ஜனவரி 24 ஆம் தேதி வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி போக்கோ சி3 (3 ஜிபி + 32 ஜிபி) ரூ. 6999 விலையிலும், 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 7999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் ரூ. 500 குறைக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர HDFC வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ சி3 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூ-டோன் டிசைன் கொண்டிருக்கும் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சியோமியின் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சியோமி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. எனினும், கடந்த ஆண்டு ரெட்மி நோட் 9 சீரிஸ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு சியோமி புதிய நோட் 10 மாடல்களின் விலையை போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யும் என கூறப்படுகிறது.
முதற்கட்டமாக இந்தியாவில் ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ 4ஜி வேரியண்ட் மட்டும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகமாகும் என தெரிகிறது. இரு மாடல்களும் கிரே, வைட் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ரெட்மி நோட் 10 சீரிஸ் மட்டுமின்றி சியோமி நிறுவனம் எம்ஐ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு புதிய ஒஎஸ் அப்டேட் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 7 மற்றும் 7டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆக்சிஜன் ஒஎஸ்11 அப்டேட் வழங்க துவங்கி இருக்கிறது. முன்னதாக இந்த அப்டேட்டில் குறைகள் இருந்த நிலையில், தற்சமயம் அவை சரி செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
கடந்த ஆண்டு ஆக்சிஜன் ஒஎஸ்11 ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களுக்கு வெளியிடப்பட்டது. அந்த வரிசையில் தற்சமயம் ஒன்பிளஸ் 7 மற்றும் 7டி சீரிஸ் மாடல்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்படுகிறது. தற்சமயம் பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்டேபில் வெர்ஷன் வெளியிடப்படலாம்.
ஓபன் பீட்டா அப்டேட் என்பதால் இதில் ஏராளமான குறைகள் இருக்கலாம் என்பதால், அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் இதனை இன்ஸ்டால் செய்வது பரிந்துரைக்கப்பட இயலாது. ஸ்மார்ட்போன்களை அப்டேட் செய்யும் முன் அதில் உள்ள தரவுகளை பேக்கப் செய்வது நல்லது.
இந்திய சந்தையில் 2021 ஆண்டு மட்டும் ஆறு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஒப்போ திட்டமிட்டு இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் 2021 ஆண்டு மட்டும் இந்திய சந்தையில் தனது 5ஜி ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ரெனோ5 ப்ரோ ஸ்மார்ட்போனினை முதல் 5ஜி மாடலாக இந்தியாவில் ஒப்போ அறிமுகம் செய்தது.
2021 ஆண்டில் மட்டும் ஒப்போ நிறுவனம் குறைந்தபட்சம் ஆறு 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஒப்போ திட்டமிட்டு உள்ளது. அனைத்து விலை பிரிவுகளிலும் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய ஒப்போ திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் சீனா தவிர வெளிநாட்டு சந்தையில் தனது முதல் 5ஜி இன்னோவேஷன் ஆய்வகத்தை இந்தியாவில் ஒப்போ துவங்கி இருக்கிறது. சீனாவுக்கு அடுத்தப்படியாக ஐதராபாத் நகரில் ஒப்போ ஆய்வு மையம் கட்டமைத்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இந்தியாவில் செயல்பட்டு வரும் ஒப்போ ஆய்வு குழுவினர் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், குவால்காம், மீடியாடெக் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பணியாற்றி வருகிறது. தற்சமயம் உலகம் முழுக்க 20-க்கும் அதிகமான நாடுகளில் ஒப்போ தனது 5ஜி தொழில்நுட்பத்தை கட்டமைக்கும் பணிகளில் ஒப்போ ஈடுபட்டு வருகிறது.
போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் சீன சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.
புதிய போக்கோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. சீனாவில் இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி போக்கோ இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.

எனினும், இந்தோனேசியா சந்தையில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஜனவரி 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இதன் இந்திய வேரியண்ட் M2010J19CI எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி என இரு வேரியணட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 12,500 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.






