என் மலர்
மொபைல்ஸ்
சிஎப்மோட்டோ நிறுவனத்தின் புதிய 300என்கே பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
சிஎப்மோட்டோ நிறுவனம் தனது மோட்டார்சைக்கிளை பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்ய இருக்கிறது. இதன் வெளியீட்டை ஒட்டி 300என்கே பிஎஸ்6 மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. டீசரில் 2021 300என்கே மாடல் அதிரடியான டிஆர்எல்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
புதிய மாடலில் மேம்பட்ட 292சிசி என்ஜின் வழங்கப்படும் என தெரிகிது. முந்தைய மாடலில் இந்த என்ஜின் 28 பிஹெச்பி பவர், 25.3 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் DOHC செட்டப் உடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் செட்டப் உள்ளிட்டவை பிஎஸ்4 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது.

அதன்படி முன்புறம் அப்சைடு-டவுன் போர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி மற்றும் இதர விவரங்கள் அறிவிப்பு.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சாம்சங் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 9825 பிளாக்ஷிப் பிராசஸர் கொண்டிருக்கும் என ப்ளிப்கார்ட் தளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் #FullOnSpeedy எனும் ஹேஷ்டேக்குடன் பதிவிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சரியாக 12 மணிக்கு அறிமுகமாக இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எப்62 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
- 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- எக்சைனோஸ் 9825 பிராசஸர்
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 64 எம்பி பிரைமரி கேமரா
- 7000 எம்ஏஹெச் பேட்டரி
- 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ12 மற்றும் கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போன்களை ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு புது மாடல்கள் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனினை சாம்சங் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவாட் கேமரா சென்சார், அதிக திறனுள்ள பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது.

முன்னதாக கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் பிஐஎஸ் தர சான்று பெற்று இருந்தது. சான்று பெற்றதை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்சமயம் இதன் வெளியீட்டு விவரம் சார்ந்த தகவல் வெளியாகி உள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ12 மாடலில் 6.5 இன்ச் HD+PLS TFT LCD டிஸ்ப்ளே, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது.
இத்துடன் டூயல் சிம் 4ஜி வசதி, ப்ளூடூத் 5, வைபை, ஜிபிஎஸ், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், பக்கவாட்டில் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ஒப்போ நிறுவனத்தின் ஏ15எஸ் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஒப்போ நிறுவனத்தின் ஏ15எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.
தற்சமயம் கூடுதல் மெமரி தவிர இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி ஒப்போ ஏ15எஸ் மாடலில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 சார்ந்த கலர் ஒஎஸ் 7.2 கொண்டிருக்கும் ஏ15எஸ் ஸ்மார்ட்போன் 3D வளைந்த பாடி, பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4230 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

ஒப்போ ஏ15எஸ் சிறப்பம்சங்கள்
- 6.55 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
- IMG PowerVR GE8320 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா
- டூயல் சிம் ஸ்லாட்
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- 4230 எம்ஏஹெச் பேட்டரி
- 10வாட் சார்ஜிங்
ஒப்போ ஏ15எஸ் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் டைனமிக் பிளாக் மற்றும் பேன்சி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 12,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய எப்19 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் முன்கூட்டியே விற்பனைக்கு வர இருக்கின்றன.
ஒப்போ நிறுவனத்தின் எப்19 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒப்போ எப்19 மற்றும் ஒப்போ எப்19 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மார்ச் மாத வாக்கில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இரு புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி ஒப்போ சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. புதிய ஒப்போ எப்19 சீரிஸ் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ எப்17 சீரிசின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய ஒப்போ எப்19 சீரிஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் ஜூம் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என்றும் இது 10x ஜூம் வசதியை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் ஒப்போ எப்17 பேஸ் வேரியண்ட் விலை ரூ. 16,990 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இரு ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் மற்றும் இதர ஆன்லைன், ஆப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
சமீபத்தில் ஒப்போ தனது ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ரூ. 35,990 எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்தது. ரெனோ 5 ப்ரோ 5ஜி மாடலில் FHD+AMOLED டிஸ்ப்ளே, 2400x1080 பிக்சல் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் பிராசஸர், 64 எம்பி குவாட் கேமரா, 32 எம்பி செல்பி கேமரா, 65 வாட் சூப்பர்வூக் 2.0 சார்ஜிங் என பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
சியோமி நிறுவனத்தின் இரு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் தனது எம்ஐ 10டி மற்றும் எம்ஐ 10டி ப்ரோ மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. எம்ஐ 10டி சீரிஸ் மாடல்களுக்கு உலகில் முதல் முறையாக இந்தியாவில் தான் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் 2.8 ஜிபி அளவு கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு அப்டேட் உடன் ஜனவரி மாதத்திற்கான செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது. எம்ஐ 10டி மற்றும் 10டி ப்ரோ பயனர்களுக்கு சிறப்பான மீடியா கண்ட்ரோல் டூல், ஸ்மார்ட் ஹோம் கண்ட்ரோல், டீபால்ட் ஸ்கிரீன் ரிகார்டர் போன்ற அம்சங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அப்டேட் டவுன்லோட் செய்ய சியோமி ஸ்மார்ட்போன்களின் செட்டிங்ஸ் மற்றும் அபவுட் போன் ஆப்ஷன்களை க்ளிக் செய்து எம்ஐயுஐ வெர்ஷனை க்ளிக் செய்து check for updates ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
சாம்சங் நிறுவனம் 200 எம்பி கேமரா சென்சாரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் 200 எம்பி ISOCELL கேமரா சென்சார் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய 200 எம்பி கேமரா சென்சார் முதலில் சாம்சங் அல்லாத நிறுவன ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த கேமரா இசட்டிஇ ஆக்சன் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் முதலில் வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய 200 எம்பி கேமரா 16K தர வீடியோ பதிவு செய்யும் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது புகைப்படங்களின் தரத்தை மேம்பட்ட 16 இல் 1 முறையில் பிக்சல் பின்னிங் செய்யும் என்றும் வீடியோக்களுக்கு 4 இல் 1 முறையில் பிக்சல் பின்னிங் செய்யும் திறன் கொண்டிருக்கும்.

முன்னதாக சாம்சங் நிறுவனம் எக்சைனோஸ் 1080 5 நானோமீட்டர் மொபைல் பிராசஸரை 5ஜி வசதி மற்றும் 200 எம்பி கேமரா உள்ளிட்ட அம்சங்களை இயக்கும் திறனுடன் அறிமுகம் செய்து இருந்தது. தற்சமயம் வெய்போ தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய 200 எம்பி சாம்சங் சென்சார் S5KGND எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய சென்சார் அளவில் 1/1.37- இன்ச் அளவில் 1.28 மைக்ரான் பிக்சல்களை கொண்டிருக்கிறது. முன்னதாக இசட்டிஇ தலைவர் நி பெய் வெளியிட்ட தகவல்களில், புதிய ஸ்மார்ட்போன் சந்தையில் கிடைப்பதில் தலைசிறந்த கேமரா சிஸ்டம் கொண்டிருக்கும் என தெரிவித்து இருந்தார்.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருப்பதை தெரிவித்து உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நஇறுவனம் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டு உள்ளது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகமாகும் என கூறப்பட்டது.
நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் நோக்கியா 2.4 மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படாமல் இருந்தது. தற்சமயம் நோக்கியா 3.4 மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.
சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் பன்ச் ஹோல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போனின் குறைந்த விலை எடிஷன் ஆகும்.
புதிய கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் ல் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர், கொண்டிருக்கிறது. இத்துடன் அதிகபட்சம் 3 ஜிபி ரேம், 13எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்02 சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 1560×720 பிக்சல் HD+ LCD இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6739W பிராசஸர்
- PowerVR Rogue GE8100 GPU
- 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் சாம்சங் ஒன் யுஐ
- டூயல் சிம்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.9
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 5 எம்பி செல்பி கேமரா, f/2.0
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ யுஎஸ்பி
- 5,000 எம்ஏஹெச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் புளூ, ரெட், கிரே மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், அமேசானில் இது ரூ. 6,799 எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை பிப்ரவரி 9 ஆம் தேதி துவங்குகிறது.
ஐடெல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 5499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஐடெல் மொபைல்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஏ47 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஹெச்டி பிளஸ் புல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 5 எம்பி ஏஐ டூயல் கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, பல்வேறு அம்சங்களை வழங்கும் கைரேகை சென்சார், கஸ்டமைஸ்டு ஷாட்கட் அம்சம், பேஸ் அன்லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐடெல் ஏ47 சிறப்பம்சங்கள்
- 5.5 இன்ச் ஹெச்டி பிளஸ் புல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 5 எம்பி ஏஐ டூயல் கேமரா
- 5 எம்பி செல்பி கேமரா
- டூயல் சிம் ஸ்லாட்
- கைரேகை சென்சார், பேஸ் அன்லாக்
- ஆண்ட்ராய்டு 9 கோ எடிஷன்
- 3020 எம்ஏஹெச் பேட்டரி
புதிய ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் காஸ்மிக் பர்பிள் மற்றும் ஐஸ் லேக் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை பிப்ரவரி 5 ஆம் தேதி துவங்குகிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரியல்மி நிறுவனம் பிப்ரவரி 4 ஆம் தேதி தனது எக்ஸ்7 மற்றும் எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. சமீபத்தில் ரியல்மி எக்ஸ்7 5ஜி ரியல்மி இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது.
தற்சமயம் ரிய்லமி எக்ஸ்7 5ஜி ரேம் மற்றும் மெமரி விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவில் ரியல்மி எக்ஸ்7 பேஸ் வேரியண்ட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்றும் இதன் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இதுதவிர 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 21,999 விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. ரியல்மி எக்ஸ்7 மாடல் துவக்க விலை ரூ. 17 ஆயிரத்தில் துவங்கலாம் என கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் விலை விவரங்கள் ரியல்மி எக்ஸ்7 சீன விலையை விட குறைவு ஆகும்.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ்7 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 60 ஹெர்ட்ஸ் FHD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் மோட்டோ ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அப்டேட் ஐக்கிய ராஜ்ஜியத்தில் வழங்கப்படுகிறது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் இந்த அப்டேட் வழங்கப்படலாம்.
மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான ஆண்ட்ராய்டு 11 அப்டேட் உடன் ஜனவரி 2021 ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது. மோட்டோ ஜி ப்ரோ பயனர்கள் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்ததை ரெடிட் தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

புதிய அப்டேட் கான்வெர்சேஷன் பபிள், ஸ்கிரீன் ரெக்கார்டிங், மேம்பட்ட மீடியா கண்ட்ரோல் மற்றும் பிரைவசி அப்கிரேடு போன்ற அம்சங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஜனவரி 2021 மாதத்துக்கான ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது.
முன்னதாக 2020 டிசம்பர் மாதத்தில் மோட்டோ ஜி ப்ரோ உள்பட 22 இதர மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படும் என மோட்டோரோலோ தெரிவித்து இருந்தது. எனினும், வெளியீட்டுக்கான காலக்கெு பற்றி எந்த தகவலும் வழங்கப்படாமல் இருந்தது.






