search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரெட்மி நோட் 10 டீசர்
    X
    ரெட்மி நோட் 10 டீசர்

    இந்தியாவில் அந்த பிராசஸருடன் வெளியாகும் ரெட்மி நோட் 10 சீரிஸ்

    ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அனைத்திலும் இந்த அம்சம் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.


    இந்தியாவில் ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த நிலையில், புதிய நோட் 10 சீரிஸ் மாடல்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கென சியோமி நிறுவனம் குவால்காமுடன் இணைந்துள்ளது.

    விரைவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி நோட் 10, நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 700 சீரிஸ் பிராசஸர்கள் வழங்கப்படலாம். மூன்று நோட் மாடல்களிலும் முறையே ஸ்னாப்டிராகன் 720ஜி, 765ஜி மற்றும் 768ஜி சிப்செட்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    குவால்காம் பிராசஸர் மட்டுமின்றி புதிய மாடல்களில் பெரிய பேட்டரி, டிஸ்ப்ளே மற்றும் குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுவரை ரெட்மி வெளியிட்டு உள்ள தகவல்களின்படி புதிய நோட் 10 சீரிஸ் மாடல்களில் அதிக ரிப்ரெஷ் ரேட், IP52 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.

     ரெட்மி இந்தியா ஸ்கிரீன்ஷாட்

    இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, பிரீமியம் பில்டு கொண்டிருக்கும் என்றும், ஹை-ரெஸ் ஆடியோ போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. மேலும் இதன் ப்ரோ வேரியண்ட் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.  

    முந்தைய தகவல்களின் படி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 64 எம்பி குவாட் கேமரா, அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 5050 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்பட்டது. 
    Next Story
    ×