search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷப்பாம்பு"

    • அப்பாவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தபோது விஷப்பாம்பு கடித்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள செம்மேடு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாவு (வயது 73). இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தபோது விஷப்பாம்பு கடித்தது. இதில் அப்பாவு சம்பவ இடத்திலேயே இறந்தார்். இது குறித்து அவரது மகன் அஜித் குமார் கொடுத்த புகாரின் பேரில் நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாம்பு கடித்து விவசாயி பலியானார்.
    • கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகேயுள்ள தோட்டப்பாடி கிராமத்தில் வசிப்பவர் ராமர் (வயது 37). இவருக்கு செல்வி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்்ளனர். இவர் விவசாயம் செய்து வருகிறார். கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி ராமர் தனது வீட்டில் விளக்கேற்றிவிட்டு, நிலத்தில் உள்ள பாசன கிணறு அருகே விளக்கேற்றிவிட்டு திரும்பினார். அப்போது அவரது காலில் பூச்சி கடித்தது போல உணர்ந்தார்.

    உடனே அங்கு பார்க்கும் போது விஷப்பாம்பு அவரை கடித்துவிட்டு சரசரவென ஒடியது. இவர் கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் ஒடிவந்து ராமரை சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ராமரின் மனைவி செல்வி (வயது 34) அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் அருகேயுள்ள கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை நீர் வடியாமல் இருப்பதால், மழை நீரில் பாம்பு போன்ற விஷ சந்துக்கள் உள்ளன.
    • தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பை உயிருடன் பிடித்து சென்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதனால் வெள்ளகோவில் பகுதிகளில் உப்புபாளையம் ரோடு, சக்தி நகர், குமாரவலசு, கல்லாங்காடு வலசு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வங்கி, சார்பதிவாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றன.

    கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை நீர் வடியாமல் இருப்பதால், மழை நீரில் பாம்பு போன்ற விஷ சந்துக்கள் உள்ளன. நேற்று காலை உப்புபாளையம் ரோடு, சக்தி நகர் விஜயகுமார் என்பவர் வீட்டின் முன்பு 4 அடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்தது. இதை அறிந்த விஜயகுமார் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அதிகாரி வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பை உயிருடன் பிடித்து சென்றனர்.

    • ஒட்டன்சத்திரம் அருகே துணை மின் நிலையத்தில் பிடிபட்ட நல்லபாம்பை வனத்துறையினர் மீட்டனர்
    • மின் நிலையத்தில் சிக்கிய நல்லபாம்பு

    ஒட்டன்சத்திரம் :

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி பிரிவு மாட்டுப்பாதையில் அமைந்திருக்கும் துணை மின் நிலையத்தில் பாம்பு புகுந்து விட்டதாக துணைமின் நிலைய அதிகாரிகள் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் துணை மின் நிலையத்தில் உள்ள மோட்டார் அறைக்குள் இருந்த சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் மீட்டனர்.

    பின்னர் மீட்கப்பட்ட பாம்பு ஒட்டன்சத்திரம் வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பத்திரமாக விட்டனர். மேலும் துணை மின் நிலையத்தில் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த அதிகாரிகள் இடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


    ×