search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு பயிற்சி"

    • பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
    • 50 மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டார வள மையத்தில் ஒருங்கி ணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மாற்றுத்திறன் மாணவ-மாணவிகள் உள்ளடக்கிய கல்வியின் கீழ் பள்ளி ஆயத்த பயிற்சி மையம், தொடக்க நிலை ஆயத்த பயிற்சி மையம், வீட்டு வழிக் கல்வி பயிலும் ஆதார வள மையங்களில் சேர்க்கை செய்யப்பட்டு உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சிக் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது.

    இதில் சுமார் 50 மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • ஜக்கனாரை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.
    • வேளாண்மை அறிவியல் நிலையம், மண் பரிசோதனை நிலையம் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி வட்டார தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட அரவேணுவில் தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவுக்கு கோத்தகிரி வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    இதில் ஜக்கனாரை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர். விழாவில், நீலகிரி மழைசாரல் கலை குழுவின் வாயிலாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், வேளாண்மை பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, வேளாண்மை அறிவியல் நிலையம், மண் பரிசோதனை நிலையம் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேட்டில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கோபி தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பெட்ரோல், மண்எண்ணை போன்றவற்றில் ஏற்படும் தீ விபத்துகளை தீயணைப்பு கருவியை பயன்படுத்தி அணைக்கும் முறை செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேட்டில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கோபி தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், தீ விபத்து ஏற்படும் காலங்களில் மாணவர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், எண்ணெய், பெட்ரோல் போன்ற பொருட்கள் மூலம் ஏற்படும் தீ விபத்துக்கள் குறித்தும், அவசர காலங்களில் மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    கோபி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோபி முன்னணி தீயணைப்பு வீரர் கோபால், ராமச்சந்திர மூர்த்தி, தீயணைப்பு வீரர்கள் குருமூர்த்தி, சுரேஷ், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது பெட்ரோல், மண்எண்ணை போன்றவற்றில் ஏற்படும் போது தீ விபத்துகளை தீயணைப்பு கருவியை கொண்டு தீயை அணைக்கும் முறை, தண்ணீரில் நனைக்கப்பட்ட சாக்கை பயன்படுத்தி தீ அணைக்கும் முறை, மணலை பயன் படுத்தி தீயை அணைக்கும் முறை போன்றவை செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், கோபி, புளியம்பட்டி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு சட்டத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சத்தியமங்கலம் நகராட்சியுடன் இணைந்து, விழிப்புணர்வு பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தது.
    • இந்த பயிற்சியில் சத்தியமங்கலம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.

    சத்தியமங்கலம்:

    ரீடு நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளாக குழந்தை களின் கல்வி வளர்ச்சிக்கும், பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தொழிலாளர்களின் நலனுக்காகவும் பல்வேறு அரசு துறைகளுடன் இணைந்து பணி செய்து வருகிறது.

    அதனுடைய தொடர்ச்சியாக ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், கோபி, புளியம்பட்டி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களின் வாழ்வை மேம்படுத்தவும், அவர்களுடைய குழந்தை களின் கல்வியை உறுதி செய்யவும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

    மேலும் அவர்களுக்கு கையால் மலம் அள்ளும் தடைசட்டத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சத்தியமங்கலம் நகராட்சியுடன் இணைந்து, விழிப்புணர்வு பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தது.

    இந்த பயிற்சியில் சத்தியமங்கலம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர். இந்த பயிற்சியில் மதுரையை சேர்ந்த பயிற்சியாளர் முத்துக்குமார் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.

    ரீடு நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் மகேஸ்வரன், சத்தியமங்க லம் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

    இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை ரீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா, கள ஒருங்கிணைப் பாளர்கள் சரவணக்குமார், சண்முகப்பிரியா, ராஜா மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

    ×