search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழைக்கன்று"

    • மதுரை அருகே புதிய ரக வாழைக்கன்று அறிமுகம் செய்யப்பட்டது.
    • பேப்ஸ் இயக்குநர் அருள், சிபோ பழனிவேல் உள்பட தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    சிறுமலை வாழை உற்பத்தியை அதிகப்படுத்தும் விதத்தில் வாழை புத்தாக்க திட்டத்தில் புதிய ரக திசுகள் சார் வாழைக்கன்று அறிமுகம் வாடிப்பட்டியில் நடந்தது. கிரட்செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். நபார்டுமாவட்ட மேலாளர் சக்தி பாலன் முன்னிலை வகித்தார். கிரட் இயக்குநர் கண்மணி வரவேற்றார். மாவட்ட மேலாளர் பாலசந்திரன், சிறுமலை வாழை புத்தாக்க திட்டத்தின் கீழ் திசுக்கள் சார் முதல் வாழை கன்றை சிறுமலை காய்கறி உற்பத்தியாளர்கள் நிறுவன இயக்குநர் கீதாவுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பேப்ஸ் இயக்குநர் அருள், சிபோ பழனிவேல் உள்பட தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். சீனிவாசன் நன்றி கூறினார்.

    • வாழைக்கன்றுகள், மிளகு, கொக்கோ செடிகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.
    • சொட்டுநீர் பாசனத்திற்கு 100 மற்றும் 75 சதவீதத்தில் மானியத்தில் வழங்கப்படுகிறது.

    பேராவூரணி:

    பேராவூரணி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் வட்டார பண்ணை தகவல் ஆலோசனைக் குழு கூட்டம் அட்மா திட்ட தலைவர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன்.செல்வி வரவேற்று பேசினார். தோட்டக்கலை அலுவலர் ஹேமா சங்கரி கூறுகையில், நடப்பாண்டில் செயல்பட்டு வரும் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் காய்கறி விதைகள், பழக்கன்றுகள், வாழைக்கன்றுகள், மிளகு, கொக்கோ செடிகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.

    ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வாழையில் ஊடுபயிர் காய்கறிகள், தென்னையில் ஊடுபயிராக வாழை பயிரிடலாம் என்றார்.

    தெளிப்பான்கள், அலுமினிய ஏணி, பிளாஸ்டிக் கூடைகள் மானியத்தில் வழங்கப்படுகிறது என்றார். சொட்டுநீர் பாசனத்திற்கு 100 மற்றும் 75 சதவீதத்தில் மானியத்தில் வழங்கப்படுகிறது என்பதை எடுத்துக் கூறினார்.

    வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை கீழ் உதவி வேளாண் அலுவலர் மதியழகன் கூறுகையில் சென்னையில் ஆதார விலை திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் பற்றி எடுத்துக் கூறினார்.

    இதில் வட்டார பண்ணை தகவல் ஆலோசனை குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் உதவி தொழில் நுட்ப மேலாளர் நெடுஞ்செழியன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்பமேலாளர் சத்யா செய்திருந்தார்.

    • ஒரு வாரத்துக்கு முன்பாகவே பூஜைகளுக்கு தேவையான பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வந்தது.
    • புதிதாக முளைத்த மஞ்சள் கொத்து, வாழைக்கன்று, மாவிலை தோரணங்கள் அதிக அளவில் விற்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுகிறது.

    ஆயுத பூஜை அன்று சிறிய கடைகள் முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை கடவுள் படங்கள் முன்பு பொறி, அவல், சுண்டல், தேங்காய் பல்வேறு வகையான பழங்கள் வைத்து படையல் செய்யப்படும்.

    பூசணிக்காய் உடைத்து வாழை, மாவிலை தோரணங்கள் கட்டப்படும்.

    நாளை சரஸ்வதி பூஜையும் வருவதால் பெரும்பாலான வீடுகளில் சரஸ்வதி படம் முன்பு பூஜை பொருட்கள் வைத்து தீபாராதனை காண்பித்து சாமி கும்பிடுவர்.

    மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது புத்தகங்களை சரஸ்வதி படம் முன்பு வைத்து நன்றாக படிக்க வேண்டும் என்று வழிபாடு செய்வது வழக்கம்.

    இதனால் தஞ்சையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைகளுக்கு தேவையான பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வந்தது.

    இன்று தஞ்சையில் கீழவாசல், மானம்புசாவடி, தொல்காப்பியர் சதுக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் பூஜை பொருட்கள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியது.‌ சாலை ஓரங்களில் ஏராளமான கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்தது.

    புதிதாக முளைத்த கடைகளில் மஞ்சள் கொத்து, வாழைக்கன்று, மாவிலை தோரணங்கள் அதிக அளவில் விற்கப்பட்டது.

    இதைவிட மற்ள கடைகளில் பொறி, சுண்டல், அவல், பூசணிக்காய், வாழை இலை, பழங்கள், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    காலையில் மிதமான அளவில் இருந்த பொதுமக்கள் கூட்டம் நேரம் செல்ல செல்ல அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் தஞ்சையில் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. குறிப்பாக கீழவாசலில் கூட்டம் அதிகரித்தது.

    இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஆங்காங்கே ஏற்பட்டது.

    இது தவிர பெரும்பாலான கடைகளில் சரஸ்வதி சாமி படமும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    அவற்றையும் பொதுமக்கள் வாங்கி சென்றனர். பூஜை பொருள்கள் தேவை அதிகம் இருந்ததால் அவற்றின் விலையும் சற்று அதிகரித்தது. 

    • கன்னியாகுமரியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவின் பண்ணையில் நடப்பட்ட 20 வாழை மரங்களை அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
    • ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் அரவிந்த், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள்சரண்யா, ஆறுமுகம், அலுவலர்கள் சக்திவேல், மாஞ்சனா, உதவி அலுவலர் நிஷாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :,

    கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின்கீழ் கன்னியாகுமரி அரசு பழத்தோட்ட சுற்றுசூழல் பூங்கா வளாகத்தில் 20 அரிய வகையான வாழைக்கன்று களை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நட்டு வைத்தார்.

    இந்த வாழை மரங்கள் அனைத்தும் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் உடனடியாக தோட்டக்கலை துறையினருக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில் அழியும் தருவாயிலுள்ள சுமார் 31 ரக வாழை ரகங்கள் கண்டெடுக்கப்பட்டு, கன்னியாகுமரியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவின் பண்ணையில் நடப்பட்டன. 20 வாழை ரக கன்றுகள் நடும் பணியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20-ந்தேதி தொடங்கி வைத்தேன்.

    நடவு செய்யப்பட்ட வாழை மரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், பல இனங்கள் நன்றாக வளர்ந்திருப்பதோடு பல வாழை மரங்களில் வாழைக்காய்கள் காய்த்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும்.

    இந்த 31 வகை வாழை ரகங்களின் கன்றுகளை விவசாயிகளுக்கு அதிகளவில் வழங்கி நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோன்ற, மா மற்றும் பலா வகைகளில் பல்வேறு வகைகளை கண்டறிந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் அரவிந்த், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள்சரண்யா, ஆறுமுகம், அலுவலர்கள்

    சக்திவேல், மாஞ்சனா, உதவி அலுவலர் நிஷாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×