search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிப்பறி கொள்ளை"

    • வடமாநில வியாபாரிகளை தாக்கி எல்இடி டிவியை பறித்துச் சென்ற 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • தலைமறைவான மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    உத்தர பிரதேசம் மாநிலம், முசாபர் மாவட்டத்தைச் சேர்ந்த சதாம் (32) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக திருவள்ளூரில் தங்கி இருந்து எலக்ட்ரானிக் பொருட்களை ஊர் ஊராக தனது மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தார்.

    இந்நிலையில்,நேற்று முன்தினம் மாலை ஊத்துக்கோட்டை அருகே உள்ள வடதில்லை கிராமத்திற்கு ஒரு எல்.இ.டி டிவி, 2 ஹோம் தியேட்டர் ஆகியவற்றை மோட்டார் சைக்கிளில் எடுத்துக்கொண்டு உதவியாளர் ஒசாமா (19) என்பவரை அழைத்துக் கொண்டு சென்றார்.

    வடதில்லை கிராம எல்லைக்குச் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி முனையில் வழி மறித்து வடமாநில வியாபாரிகளை தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த எல்இடி டிவி,ஹோம் தியேட்டர் ஆகியவற்றை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து வடமாநில வியாபாரி சதாம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஊத்துக்கோட்டை காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன், முதல் நிலைக் காவலர் ராஜு, காவலர்கள் முகமது அலி, மந்திரசேகர், பெருமாள் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து எல்இடி டிவி மற்றும் ஹோம் தியேட்டரை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில், குற்றவாளிகள் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை என்ற ஜெனிராஜ் (31), அரக்கோணத்தைச் சேர்ந்தவரும் தற்போது தாணிப்பூண்டியில் தங்கி இருப்பவருமான அப்துல் ரகுமான் (30) என்பதும் தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட ராஜதுரை என்ற ஜெனிராஜ், அப்துல் ரகுமான் ஆகியோர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பழைய குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    தலைமறைவான சென்றான்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    வடமாநில வியாபாரிகளை கத்திமுனையில் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளில் இருவரை 4 மணி நேரத்தில் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்த ஊத்துக்கோட்டை காவல் நிலைய போலீசாரை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ்கல்யான், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் ஆகியோர் பாராட்டினர்.

    • அப்போது அங்கு இருந்த 4 இளம் வாலிபர்கள் திடீரென்று ஜோதி மணியை வழிமறித்தனர்.
    • வழுதலம்பட்டு காலனி சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வடலூர் பார்வதிபுரம் சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 37). இவர் நேற்று வழுதலம்பட்டு செந்தாமரை வாய்க்கால் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த 4 இளம் வாலிபர்கள் திடீரென்று ஜோதி மணியை வழிமறித்தனர். பின்னர் ஜோதி மணியை தாக்கி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு, ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்து தப்பித்து சென்றனர். இதில் காயமடைந்த ஜோதிமணி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்து ஜோதிமணி குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இதில் திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் சேர்ந்த சுரேஷ் ராகுல் (வயது 19), நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சேர்ந்த 18 வயது சிறுவன், திருப்பூர் மாவட்டம் சேர்ந்த 15 வயது சிறுவன், குறிஞ்சிப்பாடி வழுதலம்பட்டு காலனி சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • மேலும் கைதான 6 பேரும் கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
    • 6 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்(வயது 23). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 13-ந்தேதி வேலை முடிந்ததும் அவரது நண்பரான முருகேசன் என்பவருடன் சுக்கம்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா அருகில் செல்லும்போது அவர்களுக்கு பின்னால் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர், 2 பேரையும் வழிமறித்து தாக்கியதுடன் சசிகுமாரிடமிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் சசிகுமார் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜவேல், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் பல்லடம்- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை கைது செய்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் சுக்கம்பாளையம் பகுதியில் சசிகுமாரிடம் செல்போனை பறித்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த காசிராமன்(23), அதே பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து(24), இசக்கி பாண்டி(32), செய்துங்கநல்லூரை சேர்ந்த மணிகண்டன்(27), அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(23), பல்லடத்தை சேர்ந்த ராஜேஷ் குமார்(25) என்பது தெரியவந்தது. 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 6 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை ,கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    மேலும் கைதான 6 பேரும் கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் உள்ள விடுதிகளுக்கு அழகிகளை அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • புகாரின் பேரில் பல்லடம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் பகுதியில் உள்ள செல்வகணேஷ் டெக்ஸ் தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வரும் ராமமூர்த்தி (25) என்பவர் கடந்த 18 ந் தேதி இரவு வேலை முடித்து அவரது வீட்டிற்கு செல்போனில் பேசிக் கொண்டு போன போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ராமமூர்த்தியை கத்தியை காட்டி மிரட்டி ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.500 பணத்தை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதே போல பல்லடம் அருகேயுள்ள குங்குமம்பாளையம் பகுதியில் வசித்து வரும் பொன்ராஜ் (30) என்பவர் கடந்த 13 ந்தேதி இரவு நேரம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரது ரூ. 17 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ஒரு பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்த பொன்ராஜ் (30) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல பல்லடம் அருகேயுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவன தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வரும் சௌந்தரபாண்டி என்பவர் கடந்த 19 ந்தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது மோட்டர் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சௌந்தரபாண்டியை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.6500 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். மேற்கண்ட 3 வழிப்பறி வழக்குகளை விசாரணை செய்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி . சசாங் சாய் உத்தரவின்பேரில் பல்லடம் டி.எ.ஸ்.பி. மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ் கார்த்திகேயன்,ராஜ்குமார், போலீசார் தாமரைக்கண்ணன்,கண்ணன்,ராபர்ட்,அஜித் மற்றும் பல்லடம் போலீஸ் நிலைய தனிப்பிரிவு சப் - இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் துரிதமாக விசாரித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட பல்லடம் அறிவொளி நகர் அழகுராஜா என்ற அருண்(23), அரவிந்த்(20), சிவகுமார்(23), கோபாலகிருஷ்ணன்(22) அஷ்ரப் அலி(28), முருகன்(18) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 செல்போன்கள், 3 கத்திகள், 1 ஸ்கூட்டர், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×