search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wayfarer Robbery"

    • புகாரின் பேரில் பல்லடம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் பகுதியில் உள்ள செல்வகணேஷ் டெக்ஸ் தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வரும் ராமமூர்த்தி (25) என்பவர் கடந்த 18 ந் தேதி இரவு வேலை முடித்து அவரது வீட்டிற்கு செல்போனில் பேசிக் கொண்டு போன போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ராமமூர்த்தியை கத்தியை காட்டி மிரட்டி ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.500 பணத்தை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதே போல பல்லடம் அருகேயுள்ள குங்குமம்பாளையம் பகுதியில் வசித்து வரும் பொன்ராஜ் (30) என்பவர் கடந்த 13 ந்தேதி இரவு நேரம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரது ரூ. 17 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ஒரு பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்த பொன்ராஜ் (30) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல பல்லடம் அருகேயுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவன தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வரும் சௌந்தரபாண்டி என்பவர் கடந்த 19 ந்தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது மோட்டர் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சௌந்தரபாண்டியை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.6500 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். மேற்கண்ட 3 வழிப்பறி வழக்குகளை விசாரணை செய்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி . சசாங் சாய் உத்தரவின்பேரில் பல்லடம் டி.எ.ஸ்.பி. மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ் கார்த்திகேயன்,ராஜ்குமார், போலீசார் தாமரைக்கண்ணன்,கண்ணன்,ராபர்ட்,அஜித் மற்றும் பல்லடம் போலீஸ் நிலைய தனிப்பிரிவு சப் - இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் துரிதமாக விசாரித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட பல்லடம் அறிவொளி நகர் அழகுராஜா என்ற அருண்(23), அரவிந்த்(20), சிவகுமார்(23), கோபாலகிருஷ்ணன்(22) அஷ்ரப் அலி(28), முருகன்(18) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 செல்போன்கள், 3 கத்திகள், 1 ஸ்கூட்டர், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×