search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன உயிரின வார விழா"

    • மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வனஉயிரின வாரவிழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வனச்சரக செல்வராஜ், ராம்பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளுடன் பங்கேற்றனர்.

    கோத்தகிரி முக்கிய சாலைகள் வழியாக பேரணி எடுத்துச் சென்று கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.

    கோத்தகிரி லாங்வுட் சோலை பாதுகாப்போம் குழு கோத்தகிரி வனச்சராகம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் கோத்தகிரி அருகில் உள்ள பெண்கள் மேல் நிலையில் பள்ளியில் நடைபெற்றது

    இதில் லாங்வுட் சோலை பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே ஜே ராஜு கலந்து கொண்டு காடுகள் மற்றும் வன விலங்குகள் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தரங்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டது

    • ஆண்டுதோறும், வன உயிரின வார விழா அக்., முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது.
    • வனவர்கள் காளிமுத்து, செந்தில் முருகன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்

    உடுமலை:

    வன உயிரின வார விழாவையொட்டி, அமராவதி வனச்சரகத்தில், வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.ஆண்டுதோறும், வன உயிரின வார விழா அக்., முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது.ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம் சார்பில், வன உயிரின வார விழாவை கொண்டாடும் வகையில், பள்ளி, கல்லூரி, மாணவர்களுக்கு, உடுமலையில், பேச்சு மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன.மேலும், இணைய வழி வாயிலாக கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.நேற்று, திருப்பூர் வனக்கோ ட்டத்தில் உள்ள 6 வனச்சரகங்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு, 'வன உயிரின வார விழா' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.அமராவதி வனச்சரகத்தில், வனப்பரப்பை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மரக்கன்றுகள் நடப்பட்டது.

    மேலும், 'வனம் மற்றும் வன உயிரினங்களை காப்போம்' என சுற்றுலா பயணிகள், உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, கையெழுத்து பிரசாரம் துவக்கப்பட்டது.மரக்கன்று நடும் நிகழ்ச்சியில், திருப்பூர் வனகோட்ட உதவி வன பாதுகாவலர் கணேஷ்ராம் தலைமை வகித்தார். வனச்சரக அலுவலர் சுரேஷ், வனவர்கள் காளிமுத்து, செந்தில் முருகன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்

    • பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
    • மாணவ, மாணவிகளுக்கு, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடந்தன.

    உடுமலை :

    ஆண்டு தோறும், வன உயிரின வார விழா அக்டோபர் முதல் வாரம் கொண்டாடப்படுகிறது. இரு ஆண்டு இடைவெளிக்குப்பின் நடப்பாண்டு ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு வனம், வன விலங்குகள் குறித்தும், இயற்கை காப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    அதன் அடிப்படையில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்படுகிறது. , உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடந்தன.ஆனைமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ்ராம் தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில், மாணவர்களுடன், அதிகாரிகள் மரக்கன்று நடவு செய்து, விழா துவங்கியது. தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடந்தன.திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    அமராவதி நகர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் உள்ள மாணவர்கள், பேச்சுப்போட்டியில் ஆர்வமாக பங்கேற்றனர். தளிஞ்சி வயல் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த மாணவர்கள், வனம் காப்பதன் அவசியம் குறித்து பேசியது வனத்துறையினர் மற்றும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இப்போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் வன உயிரின வார விழா போட்டியில் பங்கேற்பார்கள் எனவும் அனைத்து மாணவர்களுக்கும், பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார், ஆர்.ஜி.,எம் பள்ளி மேலாளர் கார்த்திகேயன் மற்றும் வனத்துறையினர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    வன உயிரின வார விழாவில் ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் இணைய வழி வாயிலாக நடக்கிறது. ஓவியப்போட்டி, வன உயிரினங்கள் பாதுகாப்பில் நமது பங்களிப்பு 'வன உயிரினங்களை பாதுகாத்தலின் அவசியம் ஆகிய தலைப்பிலும், கட்டுரை போட்டி, 'மனித- வன உயிரினங்களுக்கு இடையிலான சக வாழ்வு' என்ற தலைப்பிலும் நடக்கிறது. எல்.கே.ஜி., முதல் கல்லூரி வரையிலான பிரிவுகளில், மாணவ மாணவிகள் தங்களது, ஓவியம் மற்றும் கட்டுரை விபரங்களை wlw2020atrtpr@gmail.com என்ற இணையதளத்தில், வரும் 28ந் தேதி, மாலை 5:30 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ×