search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கிகள் விடுமுறை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • மொபைல் வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும்.

    சென்னை:

    தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர் அரசு விடுமுறை கிடைத்துள்ளது.

    இதையொட்டி, வங்கிகளுக்கும் இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

    இன்று மாதத்தின் 2- ம் சனிக்கிழமை, ஜனவரி 14 பொதுவிடுமுறை, ஜனவரி 15 திங்கட்கிழமை பொங்கல், ஜனவரி 16 செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மொபைல் வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் மக்கள் இதற்கேற்றவாறு தங்களின் பணத்தேவையை திட்டமிட்டு கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • வெள்ளிக்கிழமையை தவிர நாளை (26-ந்தேதி) முதல் 31-ந் தேதி வரை 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது.
    • வங்கிகள் 5 நாட்கள் செயல்படாததால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும்.

    சென்னை:

    அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வருகிற 30-ந்தேதி, 31-ந் தேதி ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. வாரத்துக்கு 5 நாள் மட்டுமே வேலை, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

    இதனால் 30-ந்தேதி (திங்கட்கிழமை), 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் வங்கிகள் இயங்காது. மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) அரசு விடுமுறை நாளாகும். எனவே நாளையும், வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை. இடையில் வெள்ளிக்கிழமை மட்டும் வங்கிகள் இயங்கும்.

    எனவே வெள்ளிக்கிழமையை தவிர நாளை (26-ந்தேதி) முதல் 31-ந் தேதி வரை 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது.

    வங்கிகள் 5 நாட்கள் செயல்படாததால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும். வாடிக்கையாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். அதே நேரத்தில் ஏ.டி.எம். மையங்களில் போதிய அளவு பணம் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஆன்லைன் சேவைகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே மும்பையில் துணைத் தலைமை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் சங்கம் எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. இதையடுத்து சமரச கூட்டம் வருகிற 27-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் வருகிற 27-ந்தேதி ஒருநாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
    • வேலைநிறுத்த போராட்டத்தில் அதிகாரிகளும் கலந்து கொள்வதால் வங்கிகள் அன்று முழுமையாக மூடப்படும்.

    சென்னை:

    அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நடந்தது.

    இக்கூட்டத்தில் வருகிற 27-ந்தேதி ஒருநாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:-

    வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். 2010-க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் 27-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் அதிகாரிகளும் கலந்து கொள்வதால் வங்கிகள் அன்று முழுமையாக மூடப்படும். மேலும் வேலைநிறுத்தம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் 25-ந் தேதி மற்றும் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வங்கி விடுமுறை நாட்களாகும்.

    அதனால் 3 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். வங்கி பணிகள் பாதிக்கக்கூடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×