search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலை நிறுத்தம்-விடுமுறைகளால் வங்கி சேவைகள் 5 நாட்கள் முடங்கும்
    X

    வேலை நிறுத்தம்-விடுமுறைகளால் வங்கி சேவைகள் 5 நாட்கள் முடங்கும்

    வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறையால் 5 நாட்கள் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. #BankStrike #BankHolidays
    சென்னை:

    ஊதிய உயர்வு ஒப்பந்தம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் நாளை, (டிசம்பர் 21) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் பணப்பரிமாற்றங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வாரத்தின் 4-வது சனிக்கிழமை (22-ந்தேதி) வங்கி விடுமுறையாகும். மறுநாள் 23-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறையாகும்.

    24-ந்தேதி மட்டும் வங்கி செயல்படும். மறுநாள் 25-ந்தேதி (செவ்வாய்கிழமை) கிறிஸ்துமஸ் விடுமுறையாகும். 26-ந்தேதி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. ஆதலால் 26-ந்தேதி (புதன்கிழமை) வங்கிகள் செயல்படாது என்பதால் அன்றும் வங்கி சேவை பாதிக்கக்கூடும்.


    நாளை 21-தேதி முதல் 26-ந்தேதி வரை இடையில் 24-ந்தேதி ஒருநாள் தவிர 5 நாட்களும் பணம் டெபாசிட், காசோலை பரிவர்த்தனை, பணம் எடுத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்படும். வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், கம்பெனிகள் போன்றவை பணம் மற்றும் காசோலை பரிமாற்றம் செய்ய முடியாமல் கடும் பாதிப்பை சந்திக்க கூடும்

    ஆனால் அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களும் செயல்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறு, 3 நாட்கள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் இன்று மாலைக்குள் ஏ.டி.எம்.களில் பணம் முழுமையாக நிரப்பப்படுகின்றன.

    24-ந்தேதி ஒருநாள் வங்கிகள் செயல்படுவதால் அன்று அனைத்து சேவைகளும் முழுமையாக கிடைக்கும். ஏ.டி.எம். மையங்களில் மீண்டும் பணத்தை நிரப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர். #BankStrike #BankHolidays
    Next Story
    ×