என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் - வங்கிகள் முடங்கும் அபாயம்
Byமாலை மலர்26 Dec 2018 7:57 AM IST (Updated: 26 Dec 2018 9:12 AM IST)
விடுமுறை முடிந்து வங்கிப் பணிகள் இன்று மீண்டும் துவங்கும் நிலையில், குறிப்பிட்ட சில வங்கிகளின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #BankStrike
சென்னை:
வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை (21-12-2018) அன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து 2-வது சனிக்கிழமை, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து விடுமுறைகள் வந்ததால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன. விடுமுறைகள் முடிந்து வங்கிப் பணிகள் இன்று மீண்டும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 முன்னணி வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய அமைப்பு இன்று வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி உள்ளிட்ட வங்கிகளை ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் விடுமுறை காரணமாக முடங்கிப்போன வங்கிப் பணிகள் இன்று துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், வங்கிச்சேவை பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். #BankStrike
Next Story
×