search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் தடம் புரண்டு விபத்து"

    • பணிமனையில் இருந்து ரெயில் நிலையத்திற்கு சென்றபோது பெட்டிகள் தடம் புரண்டன.
    • ரெயிலில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு இல்லை.

    திருச்சி பொன்மலையில் உள்ள ரெயில்வே பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரெயில், பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. அப்போது திடீரென ரெயிலின் நடுவில் இருந்த இரு பெட்டிகளில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன.

    இதனை அறிந்த ரெயில் ஓட்டுனர் உடனடியாக அந்த ரெயிலை நிறுத்தினார். அந்த பகுதிக்கு விரைந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1.30 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தடம் புரண்ட பெட்டிகள் மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தப்பட்டு மீண்டும் அந்த ரெயிலுடன் இணைக்கப்பட்டன.

    இதையடுத்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அந்த ரெயில் வந்தடைந்தது. பெட்டிகள் தடம் புரண்ட போது அதில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ரெயில் தடம் புரண்டது குறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×