search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்த காயம்"

    • ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    • சி.சி.டிவி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராமன் புதூர் கார்மல் தெருவை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (வயது 54), ஆட்டோ டிரைவர்.

    இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டி லிருந்து சவாரிக்கு செல்வ தாக மனைவி மேரி லதா விடம் கூறிவிட்டு சென் றார். பின்னர் இரவு வீடு திரும்பவில்லை. இதை யடுத்து அவரது மனைவி மேரிலதா கிறிஸ்துராஜை செல்போனில் தொடர்பு கொண்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    கிறிஸ்துராஜ் மாயமானது குறித்து மேரிலதா நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கிறிஸ்துராஜ் ஆசா ரிப்பள்ளம் இந்திரா நகர் பகுதியில் ரோட்டோரத்தில் ரத்த காயங்களுடன் கிடப் பதாக நேசமணி நகர் போலீ சுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    காயங்களுடன் கிடந்த கிறிஸ்துராஜை மீட்டு சிகிச் சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது .

    கிறிஸ்துராஜ் ரத்த காயங் களுடன் கிடந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது ஆட்டோவையும் போலீசார் மீட்டு நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். கிருஷ்ணராஜை தாக்கியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சவாரிக்கு அழைத்து சென்று கிறிஸ்துராஜை யாராவது தாக்கினார்களா? முன் விரோதம் காரணமாக தாக்கப்பட்டாரா? வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசா ரணை நடத்தப்பட்டு வரு கிறது. கிறிஸ்துராஜ் ரத்த காயங்களுடன் கிடந்த பகுதி யில் உள்ள சி.சி.டிவி. கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • மகள் புகாரின் பேரில் போலீசார் விசாரணை
    • கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள கொக்கவிளை, சாரூர் பகுதியை சேர்ந்தவர் கமலதாஸ் (வயது60), செங்கல்சூளை தொழிலாளி.

    இவருக்கு லைலா (47) என்ற மனைவியும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கமலதாசும் அவருடைய மனைவி லைலாவும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

    நேற்று மாலை கமலதாஸ் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு வந்தார்.அப்போது மனைவி லைலா சுயநினைவின்றி ரத்தக் காயங்களுடன் அங்கு கிடந்து உள்ளார். இதனை பார்த்து கமலதாஸ் அதிர்ச்சி அடைந்தார்.

    லைலாவின் இடதுபக்கம் நெற்றி மற்றும் கன்னத்தில் பலத்த காயங்கள் காணப் பட்டன.கமலதாஸ் பக்கத்து வீட்டை சேர்ந்த சுபின், எட்வின் ஆகியோர் உதவியுடன், மனைவியை மீட்டு ஆற்றூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி பெற்ற பிறகு மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு லைலாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சம்பவம் குறித்து கமல தாஷின் மகள் அனிஷா, திருவட்டார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து கோவளம் செல்லும் புதிய பஸ் நிலைய ரோட்டில் சிலுவை நகர் அருகே டாஸ்மாக் அரசு மது கடை பக்கம் நடுரோட்டில் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    அவருக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கவிழ்ந்து கிடந்தது. அப்போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில்1.45 மணிக்கு அந்த வழியாக வந்த யாரோ சில நபர்கள் பார்த்து இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன் பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவர் பரமக்குடியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 27) என்பது தெரிய வந்தது. அவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தாரா? அல்லது வேறு ஏதாவது வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தாரா? அல்லது யாராவது சமூக விரோத கும்பல் அவரை தாக்கியதில் படுகாயம் அடைந்தாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×