search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்பாட்டு திட்டம்"

    • நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா தலைமை தாங்கினார்.
    • கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி உலகநாத நாராயணசாமி கலை கல்லூரியின் கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு, திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு ஆதிதிராவிட கல்லூரி மாணவர் மாணவியர் விடுதிகளில் பயிலும் மாணவர்களுக்கான அண்ணல் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்டம் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் வரவேற்றார்.

    பொன்னேரி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாட்சியர் சித்ரா, பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலைக்கல்லூரி முதல்வர் தில்லை நாயகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு விடுதிகளில் பயிலும் மாணவிகள் கலந்து கொண்டு தாங்கள் விடுதியில் தங்கியிருந்து படிக்கும் நிலைகள் குறைத்து எடுத்துரைத்தனர் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர். செரின் ஆசா அண்ணல் அம்பேத்கரின் பிறப்பு மற்றும் வளர்ப்பு குறித்தும், சாதியல் தீண்டாமை கொடுமைக்கு ஆளாகி கல்வியால் சட்டம் பயின்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எவ்வாறு பல துன்பங்களுக்கு மத்தியில் உருவாக்கினார் என்பது குறித்தும் தியாகங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் பூபதிஜான், பட்டதாரி காப்பாளினி மரிய ஜெயந்தி, கல்லூரி தமிழ் பேராசிரியர் தேவராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி லேஜா உள்ளிட்டோர் நோக்க உரையாற்றினர். பட்டதாரி காப்பாளர் நன்றி உரையாற்றினார். கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

    • காஞ்சிபுரம் நகராட்சி பகுதி வளர்ச்சித் திட்டத்திற்காக 17 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
    • 17 கிராமங்களை ஒருங்கிணைத்து வளர்ச்சியை உறுதி செய்ய சி.எம்.டி.ஏ. திட்டமிட்டு பணிகளை துவங்கி உள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகர பகுதியின் விரிவாக்கத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளும் அடங்கியுள்ளன.

    இந்த விரிவாக்க பகுதியில் வளர்ச்சியை கொண்டு வர சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் பல்வேறு திட்டங்கள் உள்ளது.

    இந்த பகுதிகளில் அனைத்து துறை வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்வதற்கு சாலைகள், பாலங்கள், பூங்கா உள்ளிட்ட பொழுது போக்கு வசதிகள், விளையாட்டு மைதானம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரூ.32 கோடி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரூ.35 கோடி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரூ.25 கோடி, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரூ. 8 கோடி என நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

    இதில் செங்கல்பட்டு புதுநகர் வளர்ச்சிக்கான பகுதியானது 136.25 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட 60 கிராமங்களை உள்ளடக்கியதாக வரையறுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முடிச்சூர் கிராமத்தின் அமுதம் நகர், நேமி நத்தம் நகர் மற்றும் வரதராஜ பெருமாள் நகர் பகுதிகளுக்கு மழை நீர் வடிகால் அமைக்க ரூ.4.20 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம் நகரத்திற்கான விரிவான மேம்பாட்டுத் திட்டமும் இப்போது தயாரிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள வசதிகளை போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 17 கிராமங்கள் உட்பட 65 கிராமங்களை இணைத்து 2 செயற்கை கோள் நகரங்களை உருவாக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது .

    இதற்காக நகராட்சி துறை சார்பில் திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகளுக்கான சென்னை பெருநகரப் பகுதிக்கான நகர மேம்பாட்டுத் திட்டம் வரைவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

    இது சம்பந்தமாக, முக்கிய பகுதியின் பாரம்பரியம் மற்றும் மறுமேம்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டு விரிவான மேம்பாட்டுத் திட்டமும், என்.எச்-48 ஐ ஒட்டிய கிராமங்களை மையமாகக் கொண்ட புதிய நகர மேம்பாட்டுத் திட்டமும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம் நகராட்சி பகுதி வளர்ச்சித் திட்டத்திற்காக 17 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    அதன்படி, 36.14 சதுர கிலோ மீட்டர் அளவில் வையாவூர், கலையானூர், புத்தேரி, மெலம்பி, கிளம்பி, சித்தேரிமேடு, கோனேரிக் குப்பம், திம்மசமுத்தி ரம், அச்சுக்கட்டு, நெட்டேரி உள்ளிட்ட 17 கிராமங்களை ஒருங்கிணைத்து வளர்ச்சியை உறுதி செய்ய சி.எம்.டி.ஏ. திட்டமிட்டு பணிகளை துவங்கி உள்ளது.

    • திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றது .
    • முதன்மை மாநகராட்சியாக கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வ பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    திருப்பூர் :

    உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றது . இதில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 49 வது வார்டு ஆர்வி., நகர் பகுதியில் நடைபெற்ற வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாநில செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

    அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றது முதல் இதுவரை ரூ. 101 கோடி மதிப்பீட்டில் 1036 பணிகள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் படிப்படியாக மக்களின் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் மேம்படுத்தப்படும் எனவும் 21 மாநகராட்சிகளில் திருப்பூர் மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக கொண்டுவருவதற்கான ஆக்கப்பூர்வ பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    பின்னர் பொதுமக்களிடம் பேசிய மாநில செய்தி துறை அமைச்சர் மு .பெ .சாமிநாதன், அரசு அறிவிக்கும் திட்டங்களை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று இல்லாமல் மக்களும் அதனை தொடர்ந்து கண்காணித்து அதில் உள்ள குறைகள் மற்றும் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பல்திவேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும் , திருப்பூர் மாநகராட்சியின் மேம்பாட்டுக்காக சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட திட்டங்களை மேம்படுத்த சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் தீட்டப்பட்டு தமிழக அரசின் பரிந்துரைக்கு அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.

    • நிலம் செம்மைப்படுத்தவும், இடுபொருட்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
    • நிலங்களிலுள்ள முட் புதர்களை அகற்றுதல், சமன் படுத்துதல், உழவு செய்தல் ஆகிய பணிகளுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் வட்டாரத்தில், 24 கிராமங்களில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நிலம் செம்மைப்படுத்தவும், இடுபொருட்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:-

    விவசாய நிலங்கள், போதியளவு மழை பொழிவு இல்லாததாலும், தொழிலாளர் பற்றாக்குறையாலும், விவசாயம் செய்யப்படாமல், தரிசு நிலங்களாக மாறி வருகிறது. வேளாண் துறை சார்பில், வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ், நிலங்களிலுள்ள முட் புதர்களை அகற்றுதல், சமன் படுத்துதல், உழவு செய்தல் ஆகிய பணிகளுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. மேலும் இந்நிலங்களில் சாகுபடி மேற்கொள்ள தேவையான விதைகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகளும், வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக, மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    குடிமங்கலம் வட்டாரத்தில் 24 கிராமங்களில், தரிசு நில மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தரிசு நில விவசாயிகள், சிட்டா, பட்டா, ஆதார் அட்டை நகல், போட்டோ ஆகியவற்றுடன், வேளாண் அலுவலங்களை அணுகி தரிசு நிலங்களை திருத்தி விளை நிலங்களாக மாற்றி பயன்பெறலாம்.இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    ×