search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை ஐகோர்ட்"

    • 2018-ம் ஆண்டு பினோய் மீது பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணை நடந்தது.
    • பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியது தொடர்பாக போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக இருந்தவர் கொடியேறி பாலகிருஷ்ணன்.

    உடல் நலக்குறைவு காரணமாக இவர் பதவியை ராஜினாமா செய்தார். இவரது மகன் பினோய் கொடியேறி. இவர் மீது மும்பையை சேர்ந்த இளம்பெண், மும்பை போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

    அதில் நான் துபாயில் பணிபுரிந்த போது அங்குள்ள பாரில் நடனமாடி வந்தேன். அப்போது எனக்கும் பினோயுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நெருக்கமாகி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டோம். இதில் நான் கர்ப்பம் ஆனேன்.

    கடந்த 2010-ம் ஆண்டு எனக்கு குழந்தை பிறந்தது. அதன்பின்பு நான் துபாயில் இருந்து மும்பைக்கு வந்தேன். அங்கு எனக்கு தனி வீடு எடுத்து தந்து பினோய் தங்க வைத்தார்.

    2018-ம் ஆண்டு பினோய் மீது பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணை நடந்தது. அப்போதுதான் அவருக்கு ஏற்கனவே திருமணமாகிய விபரம் தெரியவந்தது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது என்னை மிரட்டினார். என்னை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியது தொடர்பாக போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். இதுதொடர்பாக மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பான வழக்கு மும்பை கோர்ட்டில் நடந்தது. கடந்த சில ஆண்டுகளாக கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் சமரசமாக செல்ல இருதரப்பினரும் முடிவு செய்தனர்.

    இந்த தகவல் மும்பை கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு பினோய் தரப்பில் ரூ. 80 லட்சம் பணம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து மும்பை கோர்ட்டு இந்த வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தது.

    ×