search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன் பிடிக்க"

    • கடல் சீற்றம் காரணமாக நாகையில் உள்ள 25 மீனவ கிராமம் மீனவர்கள் 3 வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
    • மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    நாகப்பட்டினம்:

    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்மண்டலம், கடல் சீற்றம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 25 மீனவ கிராமம் மீனவர்கள் 3 வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதனைத் தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 25மீனவ கிராம மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர் குறிப்பாக. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங் குப்பம், கல்லார், புஷ்பவனம் வெள்ளபள்ளம் ஆறுகாட்டுதுறை கோடியக்கரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான விசைப்படகுகள் பைபர் படகுகள், நாட்டுப்படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து ள்ளனர்.

    700 க்கும் மேற்பட்ட விசைப்பட குகள் 3 ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வில்லை.

    • சத்தி ஈஸ்வரன் கோவில் படித்துறையில் இறங்கி பவானி ஆற்றில் பரிசல் போட்டு மீன் பிடித்து கொண்டிருந்தார்.
    • பரிசல்லானது திடீரென நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து ஆரோக்கிய மேரியை அமுக்கியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசூர் அடுத்த மாக்கினாகோம்பை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி (42). இவரது கணவர் அந்தோணிசாமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    அந்தோணிசாமி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆரோக்கியமேரி தினமும் பவானி ஆற்றில் மீன் பிடிக்க செல்வது வழக்கம்.

    அதேப்போல் நேற்றும் மீன்பிடிக்க தனது தங்கை மல்லிகாவுடன் சென்றார். இதற்காக ஆரோக்கிய மேரி பரிசலை எடுத்துக்கொண்டு சென்றார்.

    சத்தி ஈஸ்வரன் கோவில் படித்துறையில் இறங்கி பவானி ஆற்றில் பரிசல் போட்டு தங்கையுடன் மீன் பிடித்து கொண்டிருந்தார்.

    பின்னர் மாலை அரியப்பம்பாளையம் அம்மன் கோவில் அருகே பவானி ஆற்று தடுப்பு அணையில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது ஆரோக்கிய மேரி ஆற்றின் நடுவில் உள்ள தடுப்பணை சுவரைத் தாண்டி செல்ல பரிசலை தூக்கி போட்டு அதில் ஏற முயன்றார்.

    அப்போது பரிசல்லானது திடீரென நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து ஆரோக்கிய மேரியை அமுக்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தங்கை மல்லிகா அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஆரோக்கிய மேரியை தூக்கி மணல்மேட்டில் படுக்க வைத்து பார்த்த போது அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார்.

    உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே ஆரோக்கிய மேரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஏரியில் மீன்பிடிக்க, ராசிபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை (நீர் வளம்) அலுவலகத்தில் ராசிபுரம் கோட்ட உதவி செயற்பொறியாளர் பார்த்திபன், பொறியாளர் ரஞ்சிதா ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது.
    • ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் ஒன்றியத்தில் அக்கரைப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன்பிடிக்க, ராசிபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை (நீர் வளம்) அலுவலகத்தில் ராசிபுரம் கோட்ட உதவி செயற்பொறியாளர் பார்த்திபன், பொறியாளர் ரஞ்சிதா ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது.

    இதில், ரூ.56,950-க்கு அடிப்படை குத்தகை உரிமம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர், அதிக தொகையான ரூ.3,01,100-க்கு ஏலம் எடுத்து மீன் பிடிக்க குத்தகை உரிமத்தை பெற்றார்.

    ×