search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்களுக்கு"

    • பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கலை திறனை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவி களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் தாரமங்கலம் வட்டார அளவில் செங்குந்தர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது.
    • 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தாரமங்கலம்:

    தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கலை திறனை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவி களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் தாரமங்கலம் வட்டார அளவில் செங்குந்தர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் கலந்து முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுவோர் மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

    • 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் ஏராளமான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
    • நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை முதல் இடைத்தேர்வு மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 2 ஆயிரத்து 397 பள்ளிகள் உள்ளன. இதில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் ஏராளமான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    வருகிற 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை முதல் இடைத்தேர்வு நடைபெற உள்ளது. நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை முதல் இடைத்தேர்வு மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 14, 15, 16 -ந்தேதிகளில் காலை, மாலையில் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை இடைத்தேர்வை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார். தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தேர்வுகள் துறை செய்து வருகிறது.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசினர் ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
    • பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் இரு மாணவர்களுக்கும் தலா ரூ.2,500 வழங்கி, பள்ளி தலைமையாசிரியர் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசினர் ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் சுரேஷ்குமார், மாநில அளவிலான கபடி போட்டியிலும், மாணவர் வெங்கடேஷ், மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியிலும் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்‌ பட்டுள்ளனர். இந்த இரு மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

    பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் இரு மாணவர்களுக்கும் தலா ரூ.2,500 வழங்கி, பள்ளி தலைமையாசிரியர் ரவிசங்கர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலைஞர்புகழ், நிர்வாகிகள் கோபிநாத், குணாளன், ரமணி, தில்லையம்பலம், ஆசிரியர் முனிரத்தினம் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

    பெற்றோர்கள், ஆசிரியர்கள் கொடுத்து வரும் ஊக்கத்தினால், தொடர்ந்து முறையாக பயிற்சி பெற்று, மாவட்ட மற்றும் மாநில போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி, தேசிய அளவில் சாதனை படைப்போம் என, மாணவர்கள் இருவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 50 நபர்களுக்கு பள்ளி சீருடை வழங்குகினர்.
    • போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு சீருடை தயாரித்தார்.

    தஞ்சாவூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தஞ்சாவூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பில் பயிலும் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள மாணவர்களை கணக்கெடுத்து 50 நபர்களுக்கு அவர்களது உடலுக்கு தகுந்தாற்போல் அளவெடுத்து பள்ளி சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தஞ்சை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு சீருடை தயார் செய்தார்.

    இந்த சீருடையை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளியில் சர்வதேச ஓசோன் படலம் பாதுகாப்பு தின விழிப்புணர்வு விழா நடைபெற்றது.
    • ஓசோன் படலம் மனித நடத்தைகளால் பாதிக்கப்படுவது குறித்தும், இதனை தடுக்கும் முறைகள் குறித்தும் கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் அரசு பள்ளியில் சர்வதேச ஓசோன் படலம் பாதுகாப்பு தின விழிப்புணர்வு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு, தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் ஞானசேகரன், உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பூமியை சுற்றியுள்ள ஓசோன் படலம் மனித நடத்தைகளால் பாதிக்கப்படுவது குறித்தும், இதனை தடுக்கும் முறைகள் குறித்தும் கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.

    ஆங்கில ஆசிரியர் பூபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் பெரியசாமி, வெண்ணிலா ஆகியோர் செய்திருந்தனர். பள்ளி வளாகத்தில் பலன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    • ஈரோடு வ.உ.சி பூங்கா அருகே ஈரோடு அரசு அருங்காட்சியகம் உள்ளது.
    • நாளை சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு புலிகளின் முக்கியத்துவம் அவற்றின் பண்பு, புலிகள் எண்ணிக்கை பற்றிய புகைப்படங்கள் விளக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் புகைப்படமும் இடம்பெறுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி பூங்கா அருகே ஈரோடு அரசு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பண்டைய காலங்களில் பயன்படுத்தபட்ட பொருட்கள், நாணயங்கள், முதுமக்கள் தாழிகள் இன்னும் பல அபூர்வ பொருட்கள் சேகரி க்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    இதனை பொதுமக்கள் தினமும் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அருங்கா ட்சியகத்தின் காப்பாட்சியர் ஜென்சி கூறியதாவது:-

    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவ- மாணவி களுக்கு உள்விளக்க பயிற்சி கடந்த 27-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வரும் ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு அருங்காட்சியகம் பற்றியும், அதன் முக்கியத்துவம் வரலாறு, பொருட்களை சேகரிக்கும் பழக்கம், நாணயங்கள், தோல் பாவைகள், விலங்கியல் பொருட்கள், கற் சிற்பங்கள், மரச்சிற்பங்கள் பாதுகாக்கும் முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மேலும் நாளை சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு புலிகளின் முக்கியத்துவம் அவற்றின் பண்பு, புலிகள் எண்ணிக்கை பற்றிய புகைப்படங்கள் விளக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் புகைப்படமும் இடம்பெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி துவக்க விழா நடைபெற்றது.
    • மாணவ மாணவிகள் தங்கள் கலாசார நடனத்தின் மூலமாக பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்றனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி துவக்க விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன்,பள்ளி முதல்வர் டயானா, பள்ளி ஒருங்கிணைப்பாளர் சக்திமிருதுளா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். மாணவ மாணவிகள் தங்கள் கலாசார நடனத்தின் மூலமாக பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்றனர். பள்ளி தாளாளர் கார்த்திகேயன் கல்வியின் முக்கியத்துவத்தையும்,ஒழுக்கத்தையும் மாணவர்களுக்கு விளக்கியதுடன் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்புரை ஆற்றினார். 

    • விழுப்புரத்தில் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு மேள தாளத்துடன் பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர்.
    • தமிழகத்தில் கொரேனா காலங்களில் தனியார் பள்ளிகளிலிருந்து, அரசு பள்ளிகளுக்கு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்தனர்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் கொரேனா காலங்களில் தனியார் பள்ளிகளிலிருந்து, அரசு பள்ளிகளுக்கு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்தனர். அதன்பின்னர் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்படி பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

    இதையொட்டி மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு தமிழக அரசும் பல்வேறு சலுகைகளும், குறிப்பாக தமிழ் வழியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் அளித்து வருகின்றது. இந்நிலையில் தரமான கல்விகளை அளித்து வரும் தனியார் பள்ளிகளும் தங்கள் பள்ளியின் சேர்க்கையை கூட்டவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் அமைந்துள்ள வி.ஆர்.பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சோழன் இன்று பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பள்ளி முதல்வர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மேள தாளங்களுடன் மாணவ-மாணவிகளை வரவேற்று அவர்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர். மாணவ-மாணவிகள் முதல் நாள் வகுப்பிற்க்கு மிகுந்த உற்சாகத்துடன் சென்றனர்.

    • தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1-ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பள்ளிகள் இன்று முதல் முழுமையாக செயல்ப டுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காணப்ப ட்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1-ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக கடந்த சில நாட்களாக பள்ளி வளாகம், வகுப்பறைகள், தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வந்தது. நேற்று கடை வீதிகளில் ஸ்கூல் பேக், நோட்டுப் புத்தகம் விற்பனை அமோகமாக இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    ஈரோடு எஸ்.கே. சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் சுமதி தலைமையில் ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆரத்தி எடுத்தும், கதர் துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். மேலும் அவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து இனிப்பும் வழங்கினர். இதேப்போல் பல்வேறு பகுதிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு உற்சாகமாக வரவேற்றனர்.

    பவானி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை வரவேற்கும் விதமாக டிரம்ஸ் வாசிக்கப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மலர்தூவி நெற்றியில் திலகமிட்டு உற்சாகமாக வரவேற்றனர். திருமண வீட்டிற்கு வருபவர்களை வரவேற்பது போல் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை உற்சாகமாக வரவேற்றனர். அரசு உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர். கொரோனா காலகட்டம் என்பதால் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமான விழிப்புணர்வு பதாகைகள் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளன.

    இதுபோல் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி பெருந்துறை மொடக்குறிச்சி சத்யமங்கலம் உட்பட மாவட்டம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் வழங்கக்கூடிய இலவச பாடப்புத்தகங்கள் நோட்டுகள் சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் பணி இன்று தொடங்கியது. இன்று பள்ளிகள் தொடங்கினாலும் ஒரு வாரத்திற்கு மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்த படாது என்றும் அதற்கு பதிலாக அவர்களுக்கு புத்துணர்ச்சிக்கான வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பள்ளிகள் இன்று முதல் முழுமையாக செயல்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

    ×