search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறுமதிப்பீடு"

    • இந்த ஆண்டு விடைத்தாளை மறுமதிப்பீடு செய்வதற்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
    • பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இதுவரையில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மதிப்பெண் குறைவாக பெற்றதாக கருதினால் அவர்கள் தாங்கள் எழுதிய விடைத்தாள் நகலை பெற்று அதற்கான மதிப்பெண் சரிவர கணக்கிடப்பட்டு உள்ளதா என்பதை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

    மறுகூட்டலின்போது தவறுகள் இருந்தால் அதனை திருத்தம் செய்து மீண்டும் மாறுபட்ட மதிப்பெண்ணை சேர்த்து சான்றிதழ் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு விடைத்தாளை மறுமதிப்பீடு செய்வதற்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    பிளஸ்-2 தேர்வுக்கு மறுமதிப்பீடு முறை இருந்து வருகிறது. தற்போது முதன் முதலாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தாங்கள் உறுதியாக எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத பட்சத்தில் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்கும் மாணவர்களின் விடைத்தாளை மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும். எந்த பாடத்திற்கு மறு மதிப்பீடு செய்ய விரும்புகிறாரோ? அந்த பாடத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கப்படும்.

    இந்த திட்டம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்படுவதன் மூலம் மதிப்பெண் கூடவோ அல்லது குறையவோ கூடும். மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு மே 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்தார்.

    இதேபோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் வரும் ஜூலை 2ம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு 94.56 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
    • ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதனை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு 94.56 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் தேர்ச்சி விகிதம் அரை சதவீதம் அதிகமாகும்.

    மாணவ-மாணவிகள் தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொண்ட பின்னர் மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்வதற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் அல்லது பள்ளிகள் மூலமும் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினாலோ, விடைத்தாள் நகல் பெறவோ விண்ணப்பிக்கலாம்.

    பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் துணைத் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு கூடுதல் மார்க் வழங்கியதாக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #AnnaUniversity
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் அனைத்து பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் கூடுதல் மார்க் பெற லஞ்சம் கொடுத்துள்ளதாக புகார் எழுந்தது.

    மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ரூ.10 ஆயிரம் பெற்று அவர்களுக்கு கூடுதல் மார்க் வழங்கியதாக, அப்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும் தற்போதைய ஐடி துறை பேராசிரியையுமான உமா மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும், மண்டல அதிகாரிகள் விஜயகுமார், சிவகுமார் மற்றும் விடைத்தாள் திருத்திய 7 ஆசிரியர்கள் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ×