search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரவள்ளிக்கிழங்கு"

    • உடலில் அளவுக்கு அதிகமாக பித்தம் உள்ளவர்களுக்கு ஜவ்வரிசி கஞ்சி கொடுக்கப்படுகிறது.
    • குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருக்கிறது.

    உங்களுக்கு ஜவ்வரிசி எதில் இருந்து தயாரிக்கிறார்கள் என்று தெரியுமா? நம்முள் பலருக்கு அதை எதில் இருந்து தயாரிக்கிறார்கள் என்பதே தெரியாது. மரவள்ளிக் கிழங்கில் இருந்து எடுக்கப்படும் மாவில் இருந்துதான் ஜவ்வரிசி தயார் செய்யப்படுகிறது.

    இதை சபுதானா, சாகோ என்றும் அழைக்கிறார்கள். முற்றிலும் ஸ்டார்சால் நிறைந்துள்ள சவ்ரிசியில் ரசாயனங்கள், செயற்கை இனிப்புகள் போன்ற எதுவும் இல்லாததால் பரவலாக அனைவரும் இதை விரும்புகின்றனர். உடல்நலம் சரியில்லாமல் இருப்பவர்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த உணவை தாராளமாக அளிக்கலாம். ஏனென்றால் ஜவ்வரிசி உடனடி ஆற்றலையும் செரிமான சக்தியையும் ஒருவருக்குக் கொடுக்கிறது. மேலும் உடலை குளிர்ச்சிப்படுத்துவதிலும் இது பங்குவகிக்கிறது.

    உடலில் அளவுக்கு அதிகமாக பித்தம் உள்ளவர்களுக்கு ஜவ்வரிசி கஞ்சி கொடுக்கப்படுகிறது. இதில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருக்கிறது. எனவே ஒருவர் உடல் எடை அதிகரிக்க விரும்பினால், ஜவ்வரிசி சிறந்த உணவாக இருக்கும். இதில் கணிசமான அளவு பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் ரத்த நாளங்கள் வழியே ரத்த ஓட்டம் சீராக பாய வழிவகுப்பதால், ரத்த அழுத்தம் குறைந்து, இதயத்திற்கான சிரமத்தை குறைக்கிறது.

    தசை வளர்ச்சிக்கு தேவையான சிறந்த மூலமாக ஜவ்வரிசி திகழ்கிறது. இது உடலில் சேதமடைந்த திசுக்கள் மற்றும் செல்களை குணப்படுத்த உதவி, மற்ற செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. செரிமான ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் ஜவ்வரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கல், அஜீரணம், வீக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் இது உதவுகிறது.

    இதில் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் போன்ற முக்கிய தாதுக்கள் நிறைந்துள்ளதால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து மூட்டு வலி அபாயத்தை குறைக்கிறது. வளரும் குழந்தைகளின் உணவில் ஜவ்வரிசியை சேர்ப்பதால் அவர்களின் எலும்பு பலப்படுகிறது. இதில் எளிய சக்கரை மற்றும் மாவுச்சத்து அதிகமாக நிறைந்திருப்பதால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.

    உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சிக்கு பிறகு சாப்பிடுவதற்கான சிறந்த உணவாக ஜவ்வரிசியை தேர்வு செய்யலாம். ஏனெனில் அதில் அதிக ஆற்றல் இருப்பதால் உடல் சோர்வு, தலைச்சுற்றல், தலைவலி போன்றவற்றை தடுக்கிறது. உதாரணத்திற்கு ஒரு கப் ஜவ்வரிசியில் 540 கலோரிகள் நிறைந்துள்ளது. இதில் 152 மில்லிகிராம் மெக்னீசியம், 87 கிராம் கார்போஹைட்ரேட், 135 கிராம் மாவுச்சத்து, 30 மில்லி கிராம் கால்சியம், 16 மில்லி கிராம் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இதை தவிர புரதம், கொழுப்பு மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் சிறிதளவு உள்ளது.

    • மரவள்ளி கிழங்கு பயிர்களில் தற்பொழுது செம்பேன், மாவுப்பூச்சி தாக்குதலால் செடிகள் காய்ந்து கருகி வருகின்றது.
    • பெருமளவு விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்ட பகுதிகளில் விவசாயிகள் பல ஆயிரம் எக்டேர் அளவிற்கு வருடம் தோறும் மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்து வருகின்றனர்.

    இந்த மரவள்ளி கிழங்கு பயிர்களில் தற்பொழுது செம்பேன், மாவுப்பூச்சி தாக்குதலால் செடிகள் காய்ந்து கருகி வருகின்றது.

    இதனால் பெருமளவு விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது.

    குறிப்பாக தருமபுரி மாவட்ட பகுதிகளில் பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர் தென்கரை கோட்டை ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல 100-க்கும் மேற்பட்ட கிராமத்தில் விவசாயிகள் அதிக அளவாக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர்.

    பல நேரங்களில் மரவள்ளி பயிரிட்ட விவசாயிகளுக்கு செலவு செய்த பணம் கூட வர முடியாத நிலையில் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது இந்த பூச்சிகளின் நோய் தாக்குதலால் செடிகள் இலைகள் பழுத்து காய்ந்து உதிர்ந்து வருகிறது.

    இதனால் மகசூல் பெருமளவு குறையும் என்று விவசாயிகள் தெரிவித்து பெரும் கவலையடைந்து வருகின்றனர்.

    இவற்றை தடுக்க வேளாண்மை துறை அதிகாரிகள் பஞ்சாயத்து பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடுகள் செய்து அவற்றை தடுப்ப தற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வரத்து அதிகரிப்பால் மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று டன் ஒன்று ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனையானது

    கரூர்:

    நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிசெல்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் மரவள்ளிகிழங்கை மில் அதிபர்கள் டன் ஒன்று ரூ.15 ஆயிரத்திற்கு வாங்கிச் சென்றனர். தற்போ ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அதேபோல் கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று டன் ஒன்று ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. வரத்து அதிகரித்துள்ளதாலும் மரவள்ளி கிழங்கின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×