search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் மோதி விபத்து"

    • சாலையின் வளைவில் திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வெங்கடசமுத்திரம் அடுத்த கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 60). ஆம்பூரில் உள்ள கடையில் டெய்லராக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு செல்வதற்காக கோவிந்தாபுரம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். சாலையின் வளைவில் திரும்பும் போது எதிரே வந்த மாட்டி வண்டியின் மீது எதிர்பாராத விதமாக இவர் ஓட்டி வந்த பைக் மோதியது.

    இதில் அவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடந்த போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி, கிளித்தான் பட்டறை அருகே உள்ள வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் தனுஷ் (வயது 17).

    இவர் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் கிளித்தான் பட்டறை அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    காட்பாடி எல்.ஜி.புதூரை சேர்ந்த கதிரவன் (19). என்பவர் பைக்கில் வேகமாக வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கதிரவன் ஓட்டி வந்த பைக் தனுஷ் மீது மோதியது.

    இதில் தனுஷ் மற்றும் கதிரவன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் தனுஷ் பரிதாபமாக இறந்தார்.

    சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கதிரவனும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பைக் மோதியதில் பள்ளி மாணவனும் வாலிபரும் இறந்த சம்பவம் காட்பாடியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பின்னால் வந்த பைக் மோதியது
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டை ஜெய மாதா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சக்தி வேல் (வயது 15). அதேப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது உறவினர் மகள் யோகேஸ் வரி (15). இவர்களது நண்பர்கள் நிசாந்த் (14), அஸ்வினி (14).

    இவர்கள் நான்கு பேரும் சம்பவத்தன்று பார்சம்பேட்டை கடைத்தெரு வழியாக சாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தனர். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் நடந்து சென்று கொண்டிருந்த 4 பேர் மீதும் மோதி படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை அங்கிருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக திருப் பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வளைவில் திரும்ப முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு கண்ணனூர் ரோட்டு தெருவை சேர்ந்தவர் அரிகுமார். (வயது 27). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி மோனிகா, இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு தனது பைக்கில் அரிகுமார் சேத்துப்பட்டு- ஆரணி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    கெங்கை சூடாமணி அருகே வரும்போது வளைவில் திரும்ப முயன்றார். அப்போது பைக் நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்கு ள்ளானது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசா ருக்கு அந்த வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப் -இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் அரிகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலைத்தடுமாறி மின்கம்பத்தில் மோதியது
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    மத்திய பிரதேசம் மாநிலம், சி.ப. மாவட்டம் பஜ்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக்சிங் (வயது 28). இவர் வெம்பாக்கம் அடுத்த திருப்பனமூர் கிராமத்தில் உள்ள தனியார் ஜல்லி அரவை கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரும், இவருடன் வேலை செய்யும் ஓம்பிரகாஷ் (20) ஆகிய 2 பேரும் நேற்று வெம்பாக்கம் பகுதிக்கு பைக்கில் வந்தனர். அங்கிருந்து மீண்டும் திருப்பனமூருக்கு சென்றனர்.

    அப்போது பைக் நிலைத்தடுமாறி சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

    இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தீபக்சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த ஓம்பிரகாஷை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீபக்சிங் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சர்வீஸ் ரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    பள்ளிகொண்டா நேதாஜி தெருவை சேர்ந்தவர் ஹரி (வயது 52) பள்ளிகொண்டா பேரூராட்சி 10-வது வார்டு செயலாளராக பதவி வகித்து வந்தார்.இவருடைய மனைவி பிரேமா பள்ளி கொண்டா பேரூராட்சி கவுன்சிலராக உள்ளார்.

    ஹரி நேற்று மோட்டார் சைக்கிளில் வேலூர் நோக்கி வந்தார்.

    விரிஞ்சிபுரம் அடுத்த மேல்மொணவூர் சர்வீஸ் ரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது கருகம்புத்தூரை சேர்ந்த மணி என்பவர் பைக்கில் வந்தார் அவரது பைக் நிலை தடுமாறி ஹரி மீது மோதியது.

    இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தி.மு.க பிரமுகர் ஹரி இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் தலை துண்டாகி பலி
    • 2 குழந்தைகளுக்கு பலத்த காயம்

    நெமிலி:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஆரிய பெரும்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த விஜய் பாபு (வயது 41). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியாக கம்பெனியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அனுசியா என்ற மனைவியும் முகேஷ் (13)என்ற மகன் சோபியா (9)என்ற மகள் உள்ளனர்.

    விஜய்பாபு நேற்று பனப்பாக்கம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். சென்னை பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்ற வருகிறது.

    இதற்கு ஜல்லி ஏற்றி சென்ற டிப்பர் லாரி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தது எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறம் பைக் வேகமாக மோதியது.

    இதில் விஜய்பாபு தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மனைவி அனுசுயா மற்றும் 2 குழந்தைகள் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மனைவி அனுசுயா மற்றும் சோபியா மேல் சிகிச்சைக்குசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

    விஜய்பாபு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவர் தப்பி ஓட்டம்
    • 2 பேர் காயம்

    நெமிலி:

    நெமிலி அடுத்த கடப்பாக்கம் நெல்லூர்பேட்டை பகுதியை சேர்ந்த அசோக் (வயது 30) மற்றும் அவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

    நேற்று இவர்கள் வேலைக்கு சென்று வீடு திரும்பினர். பைக்கை அசோக் ஓட்டி வந்தார். பனப்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அசோக்கின் தந்தை நெமிலி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×