search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் திருட்டு"

    • மோட்டார் சைக்கிள்களில் இருந்து பெட்ரோலை திருடி தப்பிசெல்ல முயன்றனர்.
    • நண்பர்களான இருவரும் சேர்ந்து தொடர்ந்து நள்ளிரவில் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

    சென்னை:

    கே.கே நகர் சிவலிங்கபுரம் பகுதியில் வீடுகள் முன்பு இரவு நேரங்களில் ஏராளமன மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் நள்ளிரவு 2மணி அளவில் பெரிய கேனுடன் வந்த 2 வாலிபர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் இருந்து பெட்ரோலை திருடி தப்பிசெல்ல முயன்றனர். சத்தம் கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்த தர்ம அடி கொடுத்தனர்.

    பின்னர் அவர்களை கே.கே நகர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், விக்டர் என்பது தெரிந்தது. நண்பர்களான இருவரும் சேர்ந்து தொடர்ந்து நள்ளிரவில் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

    • ரவி (வயது 34). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
    • இரவு 11 மணியளவில் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த போது நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் பெட்ரோல் திருடிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    ஓமலூர் அடுத்த பூசாரிப்பட்டி தாசசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 34). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். இரவு 11 மணியளவில் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த போது நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் பெட்ரோல் திருடிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அந்த வாலிபரை பிடித்து தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பண்ணப்பட்டி காங்கேய னூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மகன் விக்னேஷ் (23), என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • தமிழ்ச்செல்வி தன்னுடைய இருசக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்துவது வழக்கம்.
    • இவரது இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டு வந்துள்ளது.

    திருச்சி,

    திருச்சி அரியமங்கலம்காந்தி தெரு பீடி காலனி 2வது தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 30). இவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்துவது வழக்கம். இந்த நிலையில் அவரது வாகனத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல் திருட்டு நடைபெற்று வந்துள்ளது.

    கடந்த மூன்றாம் தேதி இரவு வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடும் சத்தம் கேட்டு தமிழ்ச்செல்வி வெளியே வந்து பார்த்தார்.

    அப்போது அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த தீபக் , திருவானைக்கோவில் நடு கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்த சம்பத் நாராயணன், பிரவீன் ராஜ் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடியது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து மறு நாள் தீபக்கிடம் தமிழ்ச்செல்வி பெட்ரோல் திருடியது தொடர்பாக கேட்டபோது தீபக் மற்றும் சம்பத் நாராயணன் இருவரும் தமிழ்ச்செல்வியை தாக்கியுள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்ச்செல்வி அரியமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீபக் மற்றும் சம்பத் நாராயணன் இருவரையும் கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து 20 லிட்டர் பெட்ரோலை நிரப்பி அங்கிருந்து தப்பினர்.
    • குணசேகரன் சக ஊழியர் ஒருவரை அழைத்து கொண்டு அருகில் உள்ள இடங்களில் அந்த வாலிபர்களை தேடினார்.

    கோவை:

    கோவை கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன்(வயது62). இவர்அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு அவர் வழக்கம் போல வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பெட்ரோல் பங்கில் 20 லிட்டர் பெட்ரோலை மோட்டார் சைக்கிளில் நிரப்பி அங்கிருந்து தப்பினர்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி குணசேகரன் அவர்களை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் குணசேகரன் சக ஊழியர் ஒருவரை அழைத்து கொண்டு அருகில் உள்ள இடங்களில் அந்த வாலிபர்களை தேடினார்.

    அப்போது அருகில் 3 வாலிபர்களில் ஒருவர் மட்டும் இருந்தார். அவரை குணசேகரன் மடக்கி பிடித்தார். பின்னர் கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அவர் சிவகங்கையை சேர்ந்த செல்வகுமார் (27) என்பதும், தப்பியது அவரது நண்பர்கள் மனோஜ் கண்ணா மற்றும் மகாராஜா என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×